Aran Sei

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி – மீரட் அதிவிரைவு சாலை

விவசாய திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நடந்துவரும்  போராட்டத்தின் காரணமாக, டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தை இணைக்கும் காஸிபூர் எல்லை பகுதியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கம் – சுங்கச் சாவடிகள் முற்றுகை – விவசாயிகள் போரட்டம் இன்று

இது குறித்து, இன்று (டிசம்பர் 22) காலை டெல்லி போக்குவரத்து காவல்துறை தனது ஆதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “போக்குவரத்து அறிவிப்பு : விவசாயிகளின் போராட்டம் காரணமாக, கஸிபூர் எல்லையில் இருவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக இந்த வழித்தடத்தில் போக்குவரத்து இரண்டாவது தடவையாக முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

டெல்லி செல்லும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய ஹரியானா போலீஸ் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை முடக்கப்பட்டது

நேற்று முன் தினம் (டிசம்பர் 20), உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் நடக்கும் போராட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு செல்ல முயன்ற போது, அவர்களை காஸிபூர் எல்லை பகுதியிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதை கண்டித்து, நேற்று (டிசம்பர் 21) காலை ஒரு மணி நேரம் டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையை விவசாயிகள் முடக்கியுள்ளனர். டெல்லி எல்லை நோக்கி விவசாயிகள் செல்வதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து, விவசாயிகள் அச்சாலையில் போக்குவரத்தை அனுமதித்துள்ளனர்.

” மோடி அரசை சட்டங்களை ரத்து செய்ய வைப்போம் ” – விவசாயிகள் மேலும் உறுதி

லட்சக்கணக்கில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், டெல்லி-நொய்டா இணைப்பு சாலையின் சில்லா எல்லை பகுதியில், ஒரு வழியில் மட்டும் வாகனங்கள் நொய்டாவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து நொய்டாவுக்குச் செல்லும் வாகனங்கள், டி.என்.டி, கலிண்டி குஞ்ச், நியூ அசோக் நகர், கோண்ட்லி, டல்லூபுரா போன்ற பிற எல்லைகள் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்