Aran Sei

காவல்துறை தாக்குதலில் இஸ்லாமிய இளைஞர் மரணம் – குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமியரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி நடந்த கலவரத்தின் போது, காவல்துறையினர் இஸ்லாமியர் ஒருவரை தேசிய கீதம் பாட சொல்லி, தடியால் அடிக்கும் வீடியோ வெளியானது.

டெல்லி கலவரம் – சிறையில் தாக்கப்படும் முஸ்லீம் அரசியல் கைதிகள்

பாதிக்கப்பட்டவரின் தாய் அளித்த மனுவில், நீதிமன்றம் கண்காணிப்புக்கு கீழ் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு இந்த விசாரணையை நடத்த  வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்றும் இந்த மனு தொடர்பாக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதன் மூலம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இப்போது விசாரணையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் லைவ்லா  இணையதளம் தெரிவித்துள்ளது.

தரையில் கிடந்து காயங்களால் துடித்துக்கோண்டிருக்கும் ஐந்து ஆண்களை, தேசிய கீதம் பாட சொல்லி, காவல்துறையினர் தடிகளாலும், உதைகளாலும் அவர்களை தாக்கும் வீடியோ வைரலானது. கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியான இந்த வீடியோ, ​​முந்தைய நாள் இரவு வடகிழக்கு டெல்லியின் கர்தம் பூரியில் காவல்துறையினர் பதிவு செய்தது.

டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

அந்த ஐந்து ஆண்களில், துப்பாக்கி குண்டு காயங்களுக்கு ஆளான 23 வயதான ஃபைசன் என்ற இஸ்லாமிய இளைஞர், காவல்துறையின் தாக்குதலுக்கு அடுத்த நாள் மரணமடைந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 3-ம் தேதி, தி வயர் இணையதளம் ஃபைசனின் தாயார் கிஸ்மாத்துவை தொடர்புக்கொண்டு பேசிய போது, வீடியோவில் காணப்பட்ட ஆண்களில் ஃபைசனும் ஒருவர் என்பதையும் காவல்துறையினரின் தாக்குதலால் தான் தனது மகன் இறந்ததாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்ற மனுவில், ஃபைசன் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, காவல்துறையால் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளை அவரது தாயிடம் விவரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

காயமடைந்த ஃபைசன் ஜோதி நகர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக காவல் வைக்கப்பட்டதாகவும், பல மணிநேர தாமதத்திற்கு பின்னும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  லைவ் லா சுட்டிக்காட்டியுள்ளது.

டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்

மேலும், “ஃபைசன் இறப்பதற்கு சிறிது நேரம் முன்னர் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதால், இது காவல்துறையினரால் நடத்தப்பட்ட காவல்நிலைய மரணம் இல்லை என்று ஆகிவிடாது. மனுதாரர் இதற்கான நீதியைக் கேட்கிறார்.” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, இந்த மரணம் தொடர்பாக, பஜான்புரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

இந்த வழக்கு தொடர்பான குற்றப்பிரிவின் விசாரணையை ஒரு மோசடி என்று ஃபைசனின் தாய் கிஸ்மாத்துனின் மனு குற்றஞ்சட்டியுள்ளது என்றும் மேலும் இவ்வழக்கு விசாரனையின் நிலை அறிக்கையையும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் காவல்துறையினர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மனு கோரியுள்ளது என்றும் தி வயர் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்