Aran Sei

விவசாயிகள் போராட்டம் – நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் 19ஆவது நாளான நேற்று (டிசம்பர் 14), நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கடைப்பிடித்துள்ளனர்.

இது குறித்து, கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் பஞ்சாபின் மாநில பத்திரிகை செயலாளர் அவ்தார் சிங் மெஹ்மா பேசிய போது, “இது ஒரு அடையாள உண்ணாவிரதம். விவசாயிகள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள தங்கள் தலைநகரங்களில் இதை கடைப்பிடித்தனர். 33 தலைவர்கள்  இந்த உண்ணாவிரத போராட்டங்களில் பங்கேற்றனர். ”என்று  குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

 

“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றதாக  அவ்தார் சிங் மெஹ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 18 நாட்களில், டெல்லி போராட்டத்தில் இதுவரை உயிரிழந்துள்ள 20 க்கும் மேற்பட்டோருக்கு, மேடையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விவசாயச் சட்டங்களுக்கு 50% விவசாயிகள் எதிர்ப்பு : ஆய்வில் முடிவு

இதற்கிடையில், டெல்லி எல்லையில், ஏற்கனவே உள்ள சிமென்ட் தடுப்புகளை ஒட்டியே உலோகங்களால் ஆன மற்றொரு தடுப்பை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.

கடந்த 11-ம் தேதி, ஒடிசாவைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தத்தளிக்கும் பொருளாதாரம் – பேரிடியாய் கொரோனா

“விவசாய சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மசோதாக்கள் ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும், ஏனென்றால், கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகளின் விலை இதனால் அதிகரிக்கும். போராட்டம் பஞ்சாப் மற்றும் ஹரியானா அல்லது வட இந்தியாவுக்கு மட்டுமே என்று அரசு நம்பினால், அந்த கருத்தை மாற்றவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.” என்று அம ஆதிகர் என்ற அமைப்பைச் சேர்ந்த அமியா பாண்டவ் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

பஞ்சாபின் பெரிய விவசாய சங்கங்களில் ஒன்றான பாரதிய விவசாயிகள் சங்கம் (உக்ரஹன்) இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

இருப்பினும், அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் பஞ்சாபின் பல பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

“நாங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. இந்த முடிவை பஞ்சாபை சேர்ந்த 30  விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் எடுத்துள்ளனர். இந்த முடிவு எடுக்கப்பட்டபோது நாங்கள் அழைக்கப்படவில்லை .” என்று சங்கத்தின்  பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

மேலும், “போராட்டம் தொடங்கியதிலிருந்து 32 விவசாயிகள் சங்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். ஆனால் சில சமயங்களில் நாங்கள் வெவ்வேறு முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை வந்தன. ஆனால் விவசாய சட்டங்களை ரத்து செய்வதே எங்கள் அனைவரின் நோக்கமாகும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்