Aran Sei

ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டல் – டெல்லியில் நன்கொடை பேரணியை துவங்கிய பாஜகவினர்

விவசாயிகள் போராட்டம் காரணமாக, வடகிழக்கு டெல்லியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரியின் ரத யாத்திரை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நன்கொடைகள் சேகரிக்கும் பிரச்சாரத்தை டெல்லி பாஜக திங்கள்கிழமை (பிப்ரவரி 1) தொடங்கியுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தின்போது, 50 பேர் உயிரிழந்ததோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நகரத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ரத யாத்திரையை ஒத்திவைத்திருப்பதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

”டெல்லி காவல்துறை திறமையாகச் செயல்பட்டு நிலைமையைச் சமாளித்து வருகிறது. தேசிய தலைநகரின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் மற்றும் குண்டுவெடிப்பின் காரணமாக எனது ரத யாத்திரையை ஒத்தி வைத்திருக்கிறேன்” என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

உலோக லத்திகளைப் பயன்படுத்த உத்தரவிடப்படவில்லை – புகைப்படம் வைரலானதால் டெல்லி காவல்துறை விளக்கம்

நிலைமை சீரான பிறகு ரத யாத்திரை மேற்கொள்ளப்படும் என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி பாஜகவின் தலைவர் அதேஷ் குப்தா தலைமையில், டெல்லி பாஜக பொறுப்பாளர்கள் நகரம் முழுவதும் உள்ளவர்களிடமிருந்து நன்கொடை சேகரித்தனர்.

ரத யாத்திரை ஒத்திவைக்கப்பட்ட போதிலும், தனது தொகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் நன்கொடை வசூலித்ததாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

காணாமல் போன பெண்னை தேட, டீசலுக்கு பணம் கொடுக்க வேண்டும் – உத்திரபிரதேச காவல்துறை மீது காணாமல் போன பெண்ணின் தாயார் குற்றச்சாட்டு

வஜீர்பூர் ஜேஜே காலனியில் உள்ள வால்மீகி கோயிலிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய டெல்லி பாஜக தலைவர். “இது நாட்டில் உள்ள பலருக்கும் நம்பிக்கைக்குரிய விஷயம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கட்டுவதற்காக ஒவ்வொரு வீடுகளின் கதவையும் தட்டி பாஜகவினர் நிதி திரட்டுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

ராமர் கோவிலுக்காக நன்கொடை வசூலிக்கும் நிகழ்வு, பிப்ரவரி 27 ஆம் தேதிவரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்