Aran Sei

மீண்டும் ட்ரெண்டாகும் ஸ்டாண்ட் வித் தீபிகா

Image Credits: Economic Times

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், கொலாபாவில் உள்ள மும்பை போர்ட் டிரஸ்ட் விருந்தினர் மாளிகையில் செயல்படும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையத்தை (என்சிபி) இன்று காலை 9.45 மணிக்கு ஆஜர் ஆனார். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில், போதை மருந்து கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

கோவாவிலிருந்த தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங்குடன் வியாழக்கிழமை மும்பை வந்தடைந்தார்.

தீபிகா ஆஜராக வேண்டுமென்று கடந்த புதன்கிழமை என்சிபி அவருக்கு சம்மன் அனுப்பியது. ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கும், இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஷ்ரத்தா கபூரும் சாரா அலி கானும் இன்று விசாரணைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை, நான்கு மணி நேர விசாரணைக்குப் பின் ரகுல் ப்ரீத் சிங்கின் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காலை 10.30 மணியளவில் அவர் போர்ட் டிரஸ்ட் விருந்தினர் மாளிகைக்குள் நுழைவதைக் காண முடிந்தது என்று பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருந்தது. “ராகுல் ப்ரீத் சிங்கின் அறிக்கை இன்று எஸ்ஐடியால் பதிவு செய்யப்பட்டது. இது பகுப்பாய்வு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழங்கப்படும்” என்று என்சிபியின் இயக்குநர் முத்தா அசோக் ஜெயின் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கில் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரும் நேற்று விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில், பிரகாஷ் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழகை விசாரிக்கும் மூன்று நிறுவனங்களில் ஒன்றான போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பாலிவுட் நடிகர்களுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு குறித்து, அமலாக்க இயக்குநரகத்திடம் இருந்து பெற்ற அதிகாரப்பூர்வ தகவலுக்கு பின் விசாரணையைத் தொடங்கியது.

சுஷாந்த் சிங், ஜூன் 14 அன்று தனது மும்பை இல்லத்தில் இறந்து கிடந்தார்.

Image Credits: The Hindu
Image Credits: The Hindu

ஜூலை 28 அன்று பீகாரில், சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்திக்கு எதிராக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் காவல்துறையில் புகார் அளித்தார். ஜூலை 31 அன்று சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கை பதிவு செய்த்து. இதை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் ரியா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தபோது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டனர். போராட்டத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த தீபிகா, அப்பொழுது நிகழ்ந்த முன்னாள் ஜேஎன்யூ மாணவர் தலைவர் கன்ஹையா குமாரின் உரையையும் கேட்டார்.

ஜேஎன்யூ போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் #BoycottDeepikaPadukone மற்றும் #BoycottChhapaak போன்ற ஹாஷ்டகுகள் பயன்படுத்தப்பட்டது.

இருப்பினும், பலர் தீபிகாவுக்கு ஆதரவாக #IStandWithDeepika ஹாஷ்டகை ட்ரெண்ட் செய்தனர். இப்போது மீண்டும் என்சிபி வழக்கால் #StandWithDeepika ஹாஷ்டகை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்