Aran Sei

அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – கண்டனம் தெரிவித்த இந்திய அரசு

மெரிக்காவின் காலிப்போர்னியா மாநிலத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் அடித்தளத்தை அடையாளம் தெரியாத குற்றவாளிகள் சேதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டில் உள்ள இந்திய அமெரிக்கர்கள், இந்தச் சம்பவத்தை வெறுக்கத் தக்க குற்றமாக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வடக்கு காலிப்போர்னியாவின் டாவிஸ் நகரில் அமைந்துள்ள மத்திய பூங்காவில், வைக்கப்பட்டிருந்த 294 கிலோ எடை கொண்ட 6 அடி உயர காந்தி சிலையின் கனுக்கால் வெட்டப்பட்டு இருப்பதோடு, முகத்தின் பாதி சேதப்படுத்தப்பட்டு காணாமல் போய் இருப்பதாக, டாவிஸ் நகரில் வெளியாகும் உள்ளூர் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன் – பேரறிஞர் அண்ணா

சிலை சேதப்படுத்தப்பட்டதை, ஜனவரி 27 ஆம் தேதி அதிகாலை பூங்கா ஊழியரால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலை சீர் செய்யப்படும் வரை, சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என டேவிஸ் நகர சபை உறுப்பினர் லூகாஸ் ஃப்ரீரிச்ஸ் தெரிவித்தார்.

சிலை எப்போது சிலை சேதப்படுத்தப்பட்டது, சேதப்படுத்தப்பட்டதற்கான நோக்கம் என்பது குறித்து புலனாய்வாளர்களுக்கு இன்னும் தெரியவில்லையெனத் தி சேகர்மெண்டோ பீ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவிலியர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

”டேவிஸ் நகரில் இருக்கும் ஒரு பிரிவினருக்கு காந்தியின் சிலை, கலாச்சார சின்னமாக இருப்பதால், இந்தச் சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்” என டேவிஸ் காவல்துறையின் துணைத்தலைவர் பால் டோரோஷோவ் குறிப்பிட்டுள்ளார்.

டேவிஸ் நகருக்கு இந்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பு நன்கொடையாக வழங்கிய காந்தியின் சிலை, காந்தி எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு இயக்கங்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் நிறுவப்பட்டது.

இந்தச் சம்பவத்தைக் கடுமையாக எதிர்ப்பதாக அமெரிக்காவிடம் தெரிவித்த இந்திய அரசு, இந்த இழிவான செயலைச் செய்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி – நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்ற கொலீஜியம்

”அமைதி மற்றும் நீதிக்கான சர்வதேச அடையாளமாக விளங்கும் காந்திக்கு எதிராகச்  செய்யப்பட்டு இருக்கும் இந்த இழிவான, தீங்கிழைக்கும் செயலை இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்கிறது” என இந்திய வெளியுறவு துறை (MEA) தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் செய்தியை எடுத்துச் சென்றுள்ள வாசிங்டனில் இருக்கும் இந்திய  தூதரகம், இந்தச் சம்பவம்குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்திற்கான இடஒதுக்கீடு மறுப்பு – அண்ணா பல்கலையில்., எம்.டெக் மாணவர் சேர்க்கை நிறுத்தம்

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலை சேதபடுத்தப்பட்ட செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் நீதிக்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்