Aran Sei

விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

த்தியப் பிரதேச மாநிலத்தில் விருந்தின் போது ஆதிக்கச் சாதி ஆண்களின் தட்டுகளைத் தொட்டதால், 25 வயது தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கிஷான்பூர் கிராமத்தில் பட்டியல் வகுப்பான கோரி  சமூகத்தைச் சேர்ந்தவர் தேவ்ராஜ் அனுராஜி. இவர் விவசாயக் கூலியாக வேலை செய்து வந்துள்ளார்.

தலித் கொலை வழக்கு : விசாரிக்காத காவல் துறையினர் – உயர்நீதிமன்றம் நடவடிக்கை

நேற்று முன்தினம் (டிசம்பர் 8) பிற்பகல், அதேகிராமத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர்களான தேவராஜின் நணபர்கள் அபுர்வா சோனி மற்றும் சந்தோஷ் பால் ஆகியோர் , கிராமத்தின் புறநகருக்கு விருந்து ஒன்றில் கலந்துகொள்ள தேவ்ராஜை அழைத்திருந்திருக்கிறார்கள். அங்கு தேவையான பொருட்களை வாங்கிச் சமைத்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சமைத்த உணவைச் சாப்பிடத் தொடங்கியபோது, ​​கொலை செய்யப்பட்ட தேவ்ராஜ் அவர்களோடு ஒன்றாகச் சாப்பிட முடிவு செய்துள்ளார்.

குஜராத் : ‘உனக்கு எதற்கு உயர் சாதிப் பெயர்’ – தாக்கப்பட்ட தலித் இளைஞர்

அதனால், அங்குள்ள ஏராளமான சாப்பாட்டுத் தட்டுகளில் இருந்து ஒரு தட்டை எடுக்க முயன்றுள்ளார். அவர்களின் சாப்பாட்டுத் தட்டுகளைத் தொட்டது, அவரது ஆதிக்கச் சாதி நண்பர்களான அபுர்வா சோனி மற்றும் சந்தோஷ் பால் ஆகியோருக்குக் கோபமூட்டியிருக்கிறது என்று கவு ரிஹார் காவல் நிலைய ஆய்வாளர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத் தெரிவித்ததாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

நன்றி : The Nation Herald

மேலும், இருவரும் தேவ்ராஜை ஒரு கம்பால், ரத்தம் வரும்வரை தாக்கியுள்ளனர். பின், தேவ்ராஜ் மயக்கம் அடைந்தபோது, ​​இருவரும் அவரை அவரது வீட்டில் இறக்கிவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

கவுரிஹார் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கொலை மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று நேஷனல் ஹெரால்ட் இணையதளம் கூறியுள்ளது.

மேலும், இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் பிரிவு 34 (பொதுவான நோக்கத்திற்காகப் பலர் ஒன்றுகூடி ஒரு செயலைச் செய்வது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆனால் இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’

“குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.  விரைவில் அவர்கள் சிறைக்குப் பின்னால் இருப்பார்கள்.”  என்று காவல்துறை அதிகாரி சமீர் சவுரப் உறுதியளித்துள்ளதாக நேஷனல் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 8.25 லட்சம் நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.

மத்திய பிரதேசத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது புதிதல்ல. 15 நாட்களுக்கு முன்பு, குனா மாவட்டத்தின் கரோத் கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

அந்த கிராமத்தில் வசிக்கும் 50 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான லால்ஜிராம் அஹிர்வார், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) அவரது உறவினர்களால், சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டிக் கொடுக்காததால் கொலை செய்யப்பட்டார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், கடந்த ஜூலை 17 ஆம் தேதி, அதே மாவட்டத்தில் நிலத் தகராறு தொடர்பாக, ஐந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களைத் தாக்கியதாக ஏழு ஆதிக்கச் சாதி ஆண்கள் மீது சிவபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்