உத்தர பிரதேசத்தில், பொதுக்குழாயில் தண்ணீரை பிடிக்கச் சென்ற, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த 80வயது முதியவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
பாந்தா மாவட்டத்தில் டென்தூரா கிராமத்தில் முதியவரும் அவருடைய மகனும் அரசாங்க அடிகுழாயில் தண்ணீர் எடுக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியைச் சார்ந்த உயர்சாதியினர் மூவர் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதோடு, அவர்களை குடும்பத்தோடு எரித்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் – சாதிய பயங்களால் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகள்
இதனால் பயந்துபோன அந்த குடும்பத்தினர், கிராமத்தை விட்டு வெளியேறி, அவர்களுடைய நிலத்தில் உள்ள சிறிய குடிசையில் குடியேறியுள்ளனர்.
டிசம்பர் 25 ந்தேதி நடந்த இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருந்தபோம், வயது முதிர்ந்த தன் தந்தையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவருடைய உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து பதிவு செய்யப்படவில்லை என அவருடைய மகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதேபோல், பயந்துபோன அந்த குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறியது குறித்தும் காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்று கூறுப்படுகிறது.
சிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை
இதுகுறித்து பேசிய பிசாண்டா பகுதி காவல் ஆய்வாளர் நரேந்திர பிரதாப், தாக்குதல் நடத்தியது தொடர்பாக பபேரு வட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், புகாரின் அடிப்படையில் மூவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
(பிடிஐ செய்தி)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.