Aran Sei

ஒன்றிணையும் விவசாய சங்கங்கள் – காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியது கேரளம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கேரள விவசாயிகள் கூட்டு குழுவின் கீழ் உள்ள விவசாயிகள் திருவனந்தபுரத்தில் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று (டிசம்பர் 12) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணிகுழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சபையின் தேசிய துணைத் தலைவருமான எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை போராட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார்.

காய்கறிகளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்த கேரள அரசு

விவசாயிகள் கூட்டுக் குழுவில் உள்ள விவசாயிகள்  ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தியாகிகள் தூணுக்கு முன்பு போராட்டம் நடத்துவார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் நாட்களில்  கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இதேபோன்ற போராட்டங்களை சபை நடத்தும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

“நாட்டின் கடுமையான உழைப்பாளிகளான விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இணங்க வேண்டும். விவசாயிகளின் இந்தப் போராட்டம் வாழ்வுரிமைக்காக நடத்தப்படுவது.” என்றும் தில்லியில் ஏற்கனவே கூடியிருக்கிற லட்சக்கணக்கான விவசாயிகளுடன் தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இணைந்து வருகிறார்கள் என்றும் ராமச்சந்திரன் பிள்ளை கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி இழப்பீடு : மத்திய அரசு கடன் வாங்க தயங்குவது ஏன்? – கேரள நிதியமைச்சர்

மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் விவசாயிகளை மட்டுமல்ல, விவசாய பொருட்களைப் பயன்படுத்தும் அனைவரையும் மோசமாக பாதிக்கும் என்றும் இந்த மூன்று சட்டங்களின் நோக்கமும் விவசாய தயாரிப்புகளை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைப்பதாகும் என்றும் ராமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளதாக மலையாள மனோரமா தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 600 விவசாயிகள் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதன் மூலமாக, விவசாயிகளின் துயரங்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை இது காட்டுகிறது என்று இந்திய கம்யூனிச்ட் கட்சியின் துணைச் செயலாளர் கே.பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளதாக நியூஸ் மினிட் கூறியுள்ளது.

பத்திரிகையாளர் மீது வழக்கு – அடிப்படை உரிமையை வழங்குங்கள் – உச்சநீதி மன்றம்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூட்டுக் குழு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்