Aran Sei

துணை காவல் ஆய்வாளர் மகன் மீது புகாரளித்தவர் மர்ம மரணம் – விசாரணைக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை

பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில், கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், ”பாலியல் வன்கொடுமை ஆளானவரின் தந்தை கான்பூர் சாலை விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியதோடு, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மெளனம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“குடும்பத்திற்கு முறையாக இழப்பீடு வழங்க வேண்டும். நீதி விசாரணை நடத்த வேண்டும். உணர்வு பூர்வமற்ற அரசு விழித்துக் கொண்டு தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும் ” என காங்கிரஸ் கட்சி கோருவதாக, சுப்ரியா தெரிவித்துள்ளார்.

’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

உத்தர பிரதேச காவல்துறையின்படி, “திங்களன்று (மார்ச் 8), 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருத்துவ பரிசோதனை சமூக சுகாதார நிலையத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதை வாங்குவதற்காக  வெளியே சென்றபோது அவரது தந்தை லாரி மோதி உயிரிழந்தார்’. இது திட்டமிட்ட கொலை என குடும்பத்தினர் குற்றம் வருகின்றனர்.

“பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்சம் இந்தச் சம்பவம்குறித்து ஒரு வார்த்தையாவது பேசயிருக்க வேண்டும், ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியமைப்பது, தேர்தலில் வியூகங்கள் அமைப்பது போன்ற பணிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மும்முரமாக உள்ளார்.  இந்தச் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்.” என சுப்ரியா கூறியுள்ளார்.

“திரு மோடி தகுதிவாய்ந்தவர் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது. மிகவும் சிக்கல் என்னவென்றால், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாக இருக்கிறார். . பெண்களின் பாதுகாப்பு என்பது அவரின் துறைக்குப் பொருத்தமற்ற பிரச்சினை அல்ல என்பதால் அவர் தனது மௌனத்தை கலைப்பார்” என நம்புகிறேன் என்று ஸ்மிருதி இரானியை குறித்து சுப்ரியா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்