Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலை – மீறினால் தண்டனை வேண்டும் – காங்கிரஸ் கோரிக்கை

விவசாய துறையில் செய்யப்டுகின்ற சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது அல்ல என்றும் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையைச் சட்டத்தில் இணைக்க வேண்டும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 9), தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஹரியானா முன்னாள் முதல்வரும் முத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, விவசாயத் துறை சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் எதிரானது அல்ல என்றும் ஆனால், அனைத்து விவசாயத் துறை பங்குதாரர்களிடமும் ஆலோசித்த பின்னரே விவசாயத் துறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ஹரியானா வாழ் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் – திருமாவளவன்

மேலும், கொரோனா தொற்றுநோய் பிரச்சனைகளுக்கு மத்தியில், விவசாயிகளுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் மத்திய அரசு, தற்போதுள்ள விவசாயச் சட்டங்களை முன்வைத்தது என்றும்,  அந்தத் துறைக்கு தேவையான சீர்திருத்தங்களை அவை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச ஆதரவு விலை முறையைச் சட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே விவசாய விளைபொருட்களை வாங்குபவர்களைத் தண்டிக்க மற்றொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு ஏன் ஏற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

ஹரியானா – தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு – உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம்

மேலும்,, விவசாயத் துறை தொடர்பாகப் பாஜகவின் தரவுகள் தவறாக உள்ளது  என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, விவசாய சீர்த்திருத்தங்கள் தொடர்பாக, விவசாயத்துறை  பங்குதாரர்களுடன் கலந்தாலோசிப்பதைத் தொடங்கியுள்ளது என்றும் பூபிந்தர் சிங் ஹூடா குறிப்பிட்டுள்ளார்.

“ஹரியானாவில் நாங்கள் விவசாயிகளுக்கு அருகில் மண்டிகளை எடுத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தோம். அதன்படி நாங்கள் அதைச் செய்தோம். ஒவ்வொரு 10 கிமீ தூரத்திற்கும் ஒரு கொள்முதல் மையங்களை அமைத்துள்ளோம். 10,000 மக்கள் தொகை கொண்ட எனது சொந்த கிராமத்தில், ஒரு கொள்முதல் மையம் உள்ளது.” என்று அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரியானாவிலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் – தொடரும் வெறுப்பு அரசியல்

பூபிந்தர் சிங் ஹூடா, 2005 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு வரை இருமுறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹரியானா முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்