Aran Sei

பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை

பீகார் தேர்தலில் ‘மெகா கூட்டணி’யில் உள்ள காங்கிரஸ் தான் போட்டியிட்ட 70 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்துள்ளது.

ராகுல் காந்தியின் தலைமைக்குக் கீழான காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டைக் கேள்வி எழுப்பிய 23 தலைவர்களின் எதிர்ப்புக்குப் பின் தேர்தல் நடந்துள்ள முதல் மாநிலம் பீகார். கட்சியின் திட்டங்களைக் கேள்வி எழுப்புவது மட்டுமல்லாமல், கட்சித் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதையும் இது தாமதப்படுத்தக்கூடும் என்று ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

பீகார் தேர்தல் – சட்டமன்ற உறுப்பினர்கள் விலைபோவதைத் தடுக்க சோனியா காந்தி திட்டம்

 

உத்தரப்பிரதேசத்தின் முழுமையான தோல்வி மற்றும் மத்திய பிரதேசத்தில் நடந்த சருக்கல் ஆகியவை இந்தி மொழியை மையமாகக் கொண்ட மாநிலத்தில், கட்சியின் திறனைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

​​பீகாரில் அடைந்த தோல்வி, அடுத்து தேர்தல் வர உள்ள கேரளா, அசாம் மாநிலங்களில் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்றும் அந்த மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தலில், கைவிட்டுப் போன ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது என்றும் ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) ஆட்சிக்கு எதிரான அலையைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என்று தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், ஐக்கிய ஜனதா தளம் மகா கூட்டணியில் இருந்தபோது, ​​காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்களில் 27 இடங்களை வென்றிருந்தது.

“ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி சேரும்போதெல்லாம், அவர்கள் சாதி மற்றும் சமூக அமைப்பின் அடிப்படையில் ஒரு பலமான அணியாக மாறுகிறார்கள். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவும் ஜனதா தள கூட்டணி, போட்டியிட்ட ​​70 இடங்களில் 65 இடங்களை வென்றது. இந்த 70 இடங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்லாத / காங்கிரஸ் அல்லாத இடங்களாகும்.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ‘மிதவாத பாஜக வாக’ முயற்சித்தால் அது பூஜ்ஜியமாகிவிடும் – சசி தரூர்

பீகார் மாநில சீமஞ்சல் பகுதியான கிஷன்கஞ்ச், அரேரியா, கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்களில், இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 70% முதல் 40% வரை உள்ளது. காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு இருந்த இடங்களில் அசாதுதீன் ஒவைசியாவின் கட்சியான ஏஐஎம்ஐஎம் தனது 14 வேட்பாளார்களை நிறுத்தியுள்ளது. அந்தத் தொகுதிகள் கணிசமான இஸ்லாமிய மக்கள்தொகையைக் கொண்டனவாகும்.

“சீமஞ்சல் பகுதியில், 2015 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு 10 இடங்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை, எங்களுக்கு மூன்று இடங்களுக்குக் கீழே உள்ளது.” என்று பீகாரைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் ஜா ‘தி இந்து’ விடம் கூறியுள்ளார்.

தங்களுடைய கட்சி, பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு , ஏஐஎம்ஐஎமின் தலைவர் ஓவைசி, தான் ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருவதாகவும் அதில் தான் போட்டியிட உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

மேலும், “நாங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்களா? நீங்கள் (காங்கிரஸ்) சென்று சிவசேனாவின் மடியில் அமர்ந்திருக்கிறீர்கள். நான் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசத்தில் போராடுவேன். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் போராடுவேன். தேர்தலில் போட்டியிட நான் யாருடைய அனுமதியையாவது கேட்க வேண்டுமா? ” என்று கேட்டுள்ளார்.

2022 -ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடும் என்றும், யாருடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்பதை, அப்போது கூறுவோம் என்றும் ஓவைசி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்