Aran Sei

உரிமைக்கு போராடும் விவசாயிகள் பயங்கரவாதிகளா – பாஜகவிற்கு வலுக்கும் கண்டனம்

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக, ஆளும் பாஜக கட்சியின் தலைவர்கள் கேவலமான சொற்களைப் பயன்படுத்துவதாக பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசும், பாஜக தலைலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னாள் கூட்டணி கட்சியுமான சிரோமணி அகாலிதளம் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று (டிசம்பர் 27), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், “நீதிக்காக உண்மையான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை, நகர்ப்புற நக்சல்கள், காலிஸ்தானியர்கள், ஹூலிகன்கள் போன்ற பெயர்களால் அழைத்து அவர்களை இழிவுப்படுத்துவதை பாஜக தலைவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்களா ? – பத்திரிகை ஆசிரியர் அமைப்பு கடும் கண்டனம்

“தங்களின் பிழைப்புக்காக துயரத்துடன் போராடும் குடிமக்களுக்கும் பயங்கரவாதிகள்-போராளிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பாஜக புரிந்த கொள்ளாவிட்டால், அது மக்களுக்கான ஒரு கட்சியாக இருக்க முடியாது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “நாட்டின் குடிமக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக போராடினால், அவர்களை நக்சல்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதும் ஒரு கட்சி, அந்த மக்களை ஆட்சி செய்வதற்கான அனைத்து உரிமையையும் இழந்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

போராட்டத்தில் உள்ள பஞ்சாப் விவசாயிகளை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைப்பதற்காக பாஜக தலைவர்களுக்கு சிரோமணி அகலி தளம் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பஞ்சாப் மாநில பாஜக மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டதை கண்டிக்க வேண்டும். அக்கட்சி பஞ்சாப் மாநில விவசாயிகளை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைக்கிறது. இதை சகித்துக்கொள்ள முடியாது. அன்னதாதா (உணவை அளிப்பவர்) மீது சுமத்தும் அவதூறுகளை உடனடியாக திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில பாஜக-விற்கு அறிவுறுத்துகிறேன்.” என்று சிரோமணி அகலி தளத்தின் விவசாயிகள் பிரிவு தலைவர் சிக்கந்தர் சிங் மாலுகா கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்