Aran Sei

விவசாய சட்டங்கள் – ’வாய்ச் சொல்லால் பயனில்லை; குறைந்தபட்ச விலையை சட்டமாக்குங்கள்’ : காங்கிரஸ்

குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய எழுத்துபூர்வ உத்தரவாதங்களை சட்டரீதியாக அங்கீகரிக்காவிட்டால், அவற்றால் எந்த பயனும் இல்லை என்றும் விவசாயி சட்டங்களில் அரசு முன்மொழிந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று (டிசம்பர் 29) முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோஸ்தாரா செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – ‘பிரதமர் கலப்படம் இல்லாத பொய்யைச் சொல்கிறார்’

அப்போது பேசிய கோவிந்த் சிங், “இன்று (டிசம்பர் 30) நடக்கவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுக்காக ராஜஸ்தான் மாநில விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இதில் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் டெல்லியை நோக்கி பேரணி நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பேசிய ராஜீவ் சுக்லா, “அரசு ஒரு சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வரும்போது, அந்த சட்டத்தின் முந்தைய வடிவம் திரும்பப் பெறப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

மேலும், “இந்த அரசின் தந்திரம் என்னவென்றால், அவர்கள் எல்லா உத்தரவாதங்களையும் வாய் வழியாக வார்த்தைகளிலேயே வழங்குகிறார்கள். அவற்றை எழுத்துபூர்வ உத்தரவாதமாக அளிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. நாளை ஆட்சிக்கு வரும், மற்றொரு அரசால் அதை எளிதில் மாற்றியமைக்க முடியும்.” என்று சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

“மத்திய அரசிற்கு விவசாயிகள் மேல் உண்மையிலேயே அனுதாபம் இருந்தால், விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மூன்று சட்டங்களையும் ரத்து செய்யும் விதமாக, மற்றொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

சுவாமிநாதன் குழு அறிக்கையை செயல்படுத்தியதா மோடி அரசு? – உண்மை நிலவரம்

அரசு, விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை கேவலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறது என்றும் முதலில், நீங்கள் பிரச்சனை இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்ளவில்லை என்றால், எப்படி அதற்கு தீர்வு காணுவீர்கள் என்று கேள்வி எழுப்புயுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்