Aran Sei

`காங்கிரசுக்கு 50; இடதுசாரிகளுக்கு 50 என்பதுதான் நியாயம்’ – சிபிஐ (எம்எல்)

பீகார் சட்டமன்ற தேர்தலில், மகா கூட்டணியைச் சேர்ந்த சிபிஐ (எம்எல்) கட்சி போட்டியிட்ட 19 இடங்களில் 12 இடங்களை வென்றுள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணம் பீகார் மக்கள்தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் இடதுசாரிகளுக்குக் குறைவாகவே பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை

“இந்த வெற்றி முழுதும் பீகார் மக்களைத்தான் சேரும். இது அவர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. நாங்கள் அதற்கு ஒரு ஊடகம் மட்டுமே என்றும் மத்திய மாநில அரசுகள், நெருக்கடியான சமயத்தில் மக்களைக் கைவிட்டு அவமானப்படுத்தின. அப்போது எங்கள் தோழர்கள் தினமும் அவர்களுடன் நின்றார்கள் என்றும் திபங்கர் பட்டாச்சார்யா கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

“மகா கூட்டணி, சிபிஐ (எம்.எல்)-க்குத் தேவையான ஊக்கத்தை அளித்தது. ஆனால் இளைஞர்களின் எழுச்சிதான் இந்த வெற்றிக்குப் பெரிதும் பங்காற்றியது.” என்று திபங்கர் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.

`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

“இந்தத் தேர்தலில், இடதுசாரிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தால் மகா கூட்டணி வெற்றி பெற்றிருக்க முடியுமா” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இது ஒரு நியாயமான கேள்வி. இதற்கான விடையை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். மகா கூட்டணியில் இடதுசாரிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்று மக்கள் நினைத்தார்கள்.” என்று திபங்கர் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து திபங்கர் பட்டாச்சார்யா ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸுக்கு’ பிரத்தியேகமாக அளித்த பேட்டியில், “முன்னதாகவே நாங்கள் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக, இடதுசாரிகளுக்குக் குறைந்தது 50 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்களும் ஒதுக்கி இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

தேர்தல் முடிவுகள் குறித்து, திபங்கர் பட்டாச்சார்யா தனது ட்விட்டர் பக்கத்தில்  ”அஞ்சல் வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட வேண்டும். மகா கூட்டணி வேட்பாளர்கள் பலர், மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சிபிஐ (எம்எல்) ஏழு இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது. பின் அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது.

பீகாரில் முடிவுக்கு வரும் சமூக நீதி அரசியல் – அதன் புதிய குரல் என்னவாக இருக்கும்?

2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் மூன்று இடங்களை வென்றிருந்தது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடதுசாரிகளோடு பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தன. ஆனால் இந்த முறை இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்