Aran Sei

ஆசிட் வீச்சு : பாதிக்கப்படும் பெண்களை கண்டுகொள்ளாத அரசு – தேசிய மகளிர் ஆணையம்

நாடு முழுவதும் ஆசிட் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 1273 பேரில், 799 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) கூறியுள்ளது.

இணைய வழியில் நடைப்பெற்ற கூட்டத்தில், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டதாக ‘தி இந்து’ இனையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

அப்போது, தேசிய மகளிர் ஆணையத்தின் மேலாண்மை தகவல் அமைப்பு (எம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆசிட் வீச்சு தாக்குதல் வழக்குகள் குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஆசிட் வீச்சு தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாதது குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தன் கவலையைத் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ கூறியுள்ளது.

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

மேலும், கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 1,273 ஆசிட் வீச்சு தாக்குதல் வழக்குகளில், 474 வழக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், தாக்குதலில் உயிர்ப்பிழைப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும், அரசு தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

”உதாரணமாக, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் மற்றும் பிற குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ’நல்சா’ இழப்பீட்டுத் திட்டத்தில், பாதிப்பின்  தீவிரத்தைப் பொறுத்து 3 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான இழப்பீட்டை வழங்குகிறது.” என்று தேசிய மகளிர் ஆணையத்தின்  மாதாந்திர செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ’தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

“இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை ” – மீனா கந்தசாமி

”நாடு முழுவதும் மற்றும் மாநிலங்கள் வாரியாக பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையும், ஆணையத்தின் வலைதளமான எம்ஐஎஸ்ஸில் பதிவாகியுள்ள  வழக்குகளின் எண்ணிக்கையும் பொருந்துவதாக இல்லை.” என்று ரேகா ஷர்மா கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

சில மாநிலங்களும்  யூனியன் பிரதேசங்களில் ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை என்று பல்வேறு தரவுகளிலிருந்து தெரியவந்தது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று ஆணையத்தின் அறிக்கை கூறியுள்ளது.

ஹத்ராஸ்: சாதிய, பெண் விரோதப் பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை

பதிவான 1,273 வழக்குகளில் 726 வழக்குகளுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன என்று அறிக்கைகள் தெரிவிப்பதாக ’தி இந்து’ சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்த மாநிலங்களில் மகளிர் சட்ட உரிமைகள், மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்துதல், அவர்களின் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற திட்டங்களை முடிக்க கூடுதல் பணிகள் செய்யப்பட வேண்டும். இது ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

மேலும், மாநிலங்களிலும் பூனியன் பிரதேசங்களிலும் ஆசிட் வீச்சு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றும், பெரும்பாலான நேரங்களில் குற்றம் நடந்த தேதி, விசாரணையின் தற்போதைய நிலை, வழக்கு விசாரணையின் முன்னேற்றம் போன்றவைக் குறிப்பிடப்படுவதில்லை.” என்று குற்றஞ்சாட்டியுள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்