குஜராத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான முனாவர் ஃபாரூகி உட்பட 4 பேர், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து மத கடவுள்களையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் அநாகரிகமாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக சட்டசபை உறுப்பினரின் மகன் அளித்த புகாரை அடுத்து, நேற்று (ஜனவரி 2) நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம்
பாஜக சட்டசபை உறுப்பினர் மாலினி லக்ஷ்மன் சிங் கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் (36) இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளார்.
“நானும் என்னுடைய நண்பர்களும் இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை பார்க்க சென்றோம். அப்போது, அந்த நிகழ்ச்சியில் அநாகரீகமான கருத்துகளைக் கேட்டதும், நிகழ்ச்சியை நிறுத்துமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கட்டாயப்படுத்தினோம்.” என்று ஏக்லவ்யா சிங் கூறியுள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேலை இந்துத்துவவாதிகள் கொண்டாடுவது சரியா? – எஸ்.என்.சாஹூ
இந்த நகைச்சுவை நிகழ்ச்சி நேற்று முன் தினம் (ஜனவரி 1) அங்குள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது என்று குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“குஜராத்தில் ஜுனகத் நகரில் வசிக்கும் முனாவர் ஃபாரூக்கி மீதும் இந்தூரைச் சேர்ந்த நான்கு நபர்கள் மீது, ஏக்லவ்யா சிங் அளித்த புகாரின் பெயரில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எக்லவ்யா சிங் நிகழ்ச்சியின் வீடியோவையும் சமர்பித்துள்ளார்.” என்று துக்கோன்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மற்ற நால்வர் எட்வின் அந்தோணி, பிரகார் வியாஸ், பிரியம் வியாஸ் மற்றும் நலின் யாதவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, சட்டப் பிரிவு 269-ன் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறியுள்ளார்.
இதையடுத்து, நால்வரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்துள்ளனர். அதை நிராகரித்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.