Aran Sei

குறைந்தபட்ச ஊதியம், தொழிலாளர், விவசாயிகள் உரிமைகள் – இமாச்சல பிரதேசத்தில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்

மாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்ட பேரணியை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)  நடத்தியுள்ளது.

நேற்று (மார்ச் 17), இமாச்சல் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில்  தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில், குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு ரூ .21,000 ஆக உயர்த்துவது, மத்திய அரசு இயற்றிய நான்கு புதிய தொழிலாளர்கள் குறியீடுகள் மற்றும் மூன்று புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே பன்பற்றுதல், அங்கன்வாடி, மதிய உணவு மற்றும் ஆஷா தொழிலாளர்களின் பணியை ஒழுங்குபடுத்துதல் போன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இரண்டாண்டுகளில் அலட்சியத்தால் கொல்லப்பட்ட 421 தொழிலாளர்கள் : குஜராத் அரசு ஒப்புதல்

மேலும், மாநில அரசால் அவுட்சோர்ஸ் முறையில் பணியமர்த்தப்பட்ட அனைத்து தொழிலாளர்களின் பணிகளையும் ஒழுங்குபடுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குதல், ஆண்டுக்கு 200 வேலை நாட்களை உறுதிப்படுத்துதல் மற்றும் சாலை வியாபாரிகள் சட்டத்தை செயல்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 1,500 முதல் 2,000 போராட்டக்காரர்கள் சிம்லா பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து சௌரா மைதானத்திற்கு ஒரு பேரணியாக அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்