Aran Sei

இந்தி மொழி குறித்து ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தி மொழியை மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் அனுப்பிய சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம்.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிப்மர் மருத்துவமனையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அதிகாரப்பூர்வ மொழிக்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’: இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த விளக்கம் என்ன?

தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் ஜிப்மர் மருத்துவமனையை நாடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் அனைத்து தகவல்தொடர்புகளிலும் இந்தி மொழி பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இந்தி தெரியாதவர்களுக்கு ஜிப்மரில் வேலை கிடைக்காத சூழ்நிலைக்கு இது வழிவகுக்கும் வாய்ப்புள்ளது.

ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதைக் குறிப்பிட்டு, ஏழை நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் ஜிப்மரில் வழங்கப்படுவதில்லை என்றும், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வெளியே வாங்குமாறு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைக்கிறது. ஆகவே இங்கு நோயாளிகளுக்கு எதிராக யார் இருக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம்.சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : DTnext

தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்