Aran Sei

கிறிஸ்துமஸ் அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டது – பாதிரியார் ஜே.பெலிக்ஸ் ராஜ்

Image Credits: NDTV

ந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில், என் சக பாதிரியரான ஸ்டான் சுவாமி பற்றி நான் சிந்திக்கிறேன். டிசம்பர் 25 ஆம் நாளோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு 79 வது நாளாகிறது. தலோஜாவில் (சிறையில்) இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அவர் எவ்வாறு கொண்டாடுகிறார் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இயேசு சபையின் ஒரு உண்மையான ஊழியன் என்கிற முறையில், அவர் சக கைதிகளை அணுகி, புதிதாகப் பிறந்த தெய்வீக குழந்தை இயேசுவின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொள்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிறை அதிகாரிகள் அவரிடம் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று கூறவில்லை என்றால், அவர் இனிப்புகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்.

அர்னாபுக்கு உடனடி ஜாமீன்; ஸ்டான் சாமிக்கு ஒரு உறிஞ்சு குழல் கூட தரமுடியாது – நீதியின் மறுபக்கம்

குளிர்காலம் துவங்கியுள்ள இந்தச் சமயத்தில், உலகெங்கிலும் உள்ள 2.6 பில்லியன் கிறிஸ்தவர்களும், இயேசு மீது நம்பிக்கை கொண்ட மற்றவர்களும் ஒரே மாதிரியாக, கிறிஸ்துமஸுக்கு தயாராகியுள்ளனர். இது இப்போது ஒரு உலகளாவிய திருவிழாவாக உருமாறியுள்ளது. இது மதத்தின் எல்லைகளை கடந்து அன்பு, நட்பு, நம்பிக்கை, கருணை, மன்னிப்பு, இணக்கம் போன்ற வெவ்வேறு உணர்வுகளை அடையாளப்படுத்துகிறது. இது மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் பகிர்வதற்கான காலம்.

தற்போது கொண்டாடுவதைப்போல், 2020 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவில்லை. அப்போது ஜோசப், அன்னை மேரி மற்றும் குழந்தை இயேசு மட்டுமே கிறிஸ்துமஸை கொண்டாடினார்கள். ஆனால், மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது. இப்போது அது மிகவும் வணிகமயமாக்கப் பட்டுள்ளது. அதன் உண்மையான சாரத்தை இழந்துவிட்டது.

தற்போது டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு இந்தக் கிறிஸ்துமஸ் நல்ல செய்தியைக் கொண்டுவரும் என்று நான் நினைக்கிறன். அதற்காகப் பிராத்தனை செய்துகொள்கிறேன்.

83 வயதான பழங்குடியினர் உரிமைப் போராளி ஸ்டேன் ஸ்வாமி – என்ஐஏவால் கைது

தனது முழு வாழ்க்கையையும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் குரலற்றவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த 83 வயதான திருச்சபை உறுப்பினர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டதை இந்த உலகம் அறியும். அவர் கடுமையான நடுக்கவாத நோயால் (Parkinson’s disease) பாதிக்கப்பட்டுள்ளார். அர்ப்பணிப்புடன் சேவைகளைச் செய்த அவரை இன்று, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. எல்கர் பரிஷத் வழக்கில் அவருக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

அவருக்கு உறுஞ்சு குழாயையும் நீர் உறுஞ்சி கோப்பையையும் கூட வழங்க மறுக்கிறார்கள். இது அவர் உயிர்வாழ்வதற்கு அடிப்படையான தேவை. அவருக்கு இதனை வழங்குவதற்காகக் குரல் கொடுத்த நல்ல உங்களுக்கு நன்றி. அவரது தேவை இதை விட அதிகம். நியாயமான விசாரணையும் நீதியும்தான் அவருக்குத் தேவை.

அனைத்து வாசகர்களுக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(www.telegraphindia.com இதழில், பாதிரியார் ஜே.பெலிக்ஸ் ராஜ் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்