Aran Sei

வைரலாகும் சிராக் பஸ்வான் வீடியோ – பீகார் தேர்தல் பரபரப்பு

Image Credits: Scroll

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், தனது தந்தையின் மரணத்திற்கு ஒரு நாள் கழித்து, செய்தி ஒன்றை வெளியிடுவதற்காக ஒத்திகை பார்த்ததாகக் கூறப்படும் காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

அதில் தனது தந்தை ராம் விலாஸ் பஸ்வானின் புகைப்படத்திற்கு முன் நின்றபடி, நகைச்சுவை செய்வது, காணொளியைத் திருத்தச் சொல்வது, தலை முடியின் அடர்த்தியை பற்றிப் பேசுவது, ஆகிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

பீகாரின் முதல் கட்ட சட்டசபை தேர்தல் வகுப்பதிவிற்கு சில மணி நேரத்துக்கு முன் இந்தக் காணொளி வெளியானதால் சிராக் பாஸ்வான் (37) கவலை அடைத்துள்ளார். இந்தக் காணொளி வெளியானதில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் பங்கிருக்கக்கூடும் என்று சிராக் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ் மிகவும் தரம் தாழந்து விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஜமுய் பாராளுமன்ற உறுப்பினர் சிராக் பேசும் இந்த 2 நிமிட காணொளியில், தனது மறைந்த தந்தையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் வெள்ளை ஆடையை அணிந்துள்ளார்.

முன்னதாக, பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிராக், நிதீஷ் குமாரை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதாகச் சபதம் எடுத்தார்.

“நீங்கள் வீடியோவை எங்குக் கட் செய்வது எடிட் செய்வது என்பதை பெற்றுக்கொள்ளுங்கள். நம் வேட்பாளர்களைப் பற்றிய ஒரு வரியை நான் சேர்த்துக் கொள்கிறேன் (வீடியோவில்). ஒரு கேமரா பயன்படுதுகிறீர்களா அல்லது இரண்டா?,” என்று கேமரா குழுவைப் பார்த்துச் சிராக் பாஸ்வான் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதற்கு வினையாற்றியுள்ள நிதீஷ் குமார், “நம் தந்தைக்கு சேவை செய்வது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் இன்றைய தலைமுறையின் நடிகர்களைப் பாருங்கள், அவர்களின் தந்தை இறந்த உடனேயே படப்பிடிப்பில் மும்முரமாகி விடுகிறார்கள்,” என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த எட்டாம் தேதி காலமானார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்