Aran Sei

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் போர் செய்ய மோடி முடிவு : உ.பி பாஜக தலைவர்

credits : the indian express

இன்று மனதின் குரல் ( மான் கி பாத் ) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தேசத்துக்காக சேவை செய்யும் ராணுவ வீரர்களைப் பாராட்டினார்.

“பண்டிகைக் காலங்களில் கூட எல்லைகளில் நம்மைப் பாதுகாக்காக நிற்கும் நமது ராணுவ வீரர்களை நாம் நினைவில்கொள்ள வேண்டும். பண்டிகைகளைக் கொண்டாடும் போதும் அவர்களை நினைவில்கொள்ள வேண்டும். இந்தியத் தாயின் இந்தத் துணிச்சலான மகன்களையும் மகள்களையும் கவுரவிக்கும் வகையில் நமது வீடுகளில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

இந்நிலையில் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்தை தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச பாஜக வின் மாநில தலைவர் ஸ்வதந்த்ர தேவ் சிங்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போரிடுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து வைத்துள்ளார் என்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை, உத்தரப்பிரதேச பாஜகவின் மாநில தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங் கூறியுள்ளார்,

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் அவர் கூறிய கருத்துகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதி மன்றத்தின் அனுமதியைப் பெற்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியது, ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ஐ ரத்து செய்தது ஆகியவற்றுடன் இதை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

ராமர் கோயில் விவகாரத்தில், காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைப் போல் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் போர் புரிவதற்கு முடிவெடுத்திருக்கிறார் என்று உத்தரப்பிரதேச பாஜகவின் மாநில தலைவர் ஸ்வதந்த்ர தேவ் சிங் கூறியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போர் புரிவதற்கான நாளும் குறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் யாதவ் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வில் இதைப் பேசியிருக்கிறார் சிங். மேலும் அந்த நிகழ்வதில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஊழியர்களைத் தீவிரவாதிகள் என்று கூறினார்.

உத்தரப்பிரதேச பாஜகவின் மாநில தலைவர் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்தது பற்றி அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர குஷ்வாஹாவிடம் கேட்டதற்கு “கட்சி ஊழியர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்துவதற்கு இது போன்ற கருத்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்”.

சிங்கினுடைய கருத்து இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நேர்மாறாக இருக்கிறது.

”இந்தியாவிலிருந்து ஒரு அங்குலம் நிலத்தைக் கூட யாரும் எடுத்துக்கொள்ள விட மாட்டோம். ஆனாலும் இந்தியா சீனாவிற்கு இடையேயான எல்லைப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா விரும்புகிறது”  என்று இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியிருந்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்