டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டே சிறுவர்கள் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்று வருகின்றனர்.
சிங்கு எல்லையில் 5 வயது பிரப் வீர் சிங் தில்லன், அவருக்கு வழங்கப்பட்ட சிறிய மைக்கில், “சதா ஹக், ஐத்தே ராக் (இது எங்கள் உரிமை. அதை எங்களிடம் கொடுங்கள்)” என்று தனது 11 வயது சகோதரர் உதய் பிரதாப் சிங் தில்லன் மற்றும் தந்தை ஜஸ்பீர் சிங் ஆகியோருடன் ஒரு டிராக்டருக்குள் அமர்ந்துக்கொண்டு முழங்குகினார்.
“போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள்” – விவசாயிகள் எதிர்பார்ப்பு
”இங்கே என்ன நடக்கிறது என்றோ, நாங்கள் ஏன் இங்கே இருக்கிறோம் என்றோ அவனுக்கு (பிரப் வீர் சிங்) புரியவில்லை. ஆனால், நாங்கள் இங்கே தவறான சட்டங்களுக்கு எதிராக இருக்கிறோம் என்பது அவனுக்குத் தெரியும். மேலும் இவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்” என்று அவரது தந்தை ஜஸ்பீர் சிங் கூறுகிறார்.
ஆனால், மறுபுறம் 11 வயது உதய் பிரதாப் சிங் தில்லன், நடப்பவைகள் பற்றிய சிறிய புரிதலோடு, தந்தையும் தனது கிராமத்தினரும் நடத்திவரும் போராட்டத்தில் பங்கேற்க தானும் விரும்புவதாகக் கூறுகிறார்.
“என் தந்தையும் தாத்தாவும் எதற்காக இந்த போராட்டத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.” என்கிறார் பிரப் வீர் சிங்.
விவசாயிகள் விஷம் குடித்தால் கவலையில்லை, பீட்சா சாப்பிடுவது செய்தியா?
”ஆனால் நேற்று முன் தினம் (டிசம்பர் 15) இரவு, உதய்க்கு காய்சல் ஏற்பட்டது. அதைபற்றி அவரது தாய் கவலைப்பட்டார். எனவே நாங்கள் இருவரையும் விரைவாக வீட்டிற்கு அழைத்துச் செல்லவுள்ளோம்.” என்று தந்தை ஜஸ்பீர் சிங் கூறினார்.
ஜஸ்பீர் சிங்கின் உறவினர்கள் 10 பேர் அடங்கிய குடும்பம், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களையும் தங்களுடன் வைத்துள்ளது. இதில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் மடிக்கணினி ஆகியவற்றையும் எடுத்து வந்துள்ளனர். தொலைபேசியில் கிடைக்கும் இணையத்தைப் பயன்படுத்தி மடிக்கணினியை உபயோகிக்கிறார்.
ஏன் குழந்தைகளை போராட்டத்திற்கு அழைத்து வரவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜஸ்பீர் சிங், “இங்கே வர குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதை தாண்டி, எங்களை தவிர இந்த குழந்தைகளும் எதிர்ப்பு தெரிவிக்க இங்கே இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்ட விரும்புகிறோம். அப்போதாவது அவர் கொஞ்சமேனும் அவமானத்தையும் உணர்வார்” என்று கூறுகிறார்.
மேலும், “மிக முக்கியமாக, இது குழந்தைகளை வலிமைப்படுத்தும். அவர்களும் போராட்டம் என்றால் என்ன என்பதையும் அறிவார்கள்.” என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் ஜஸ்பீர் சிங்.
(www.thehindu.com இணையதளத்தில் வெளியான சிறப்பு செய்தியின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.