Aran Sei

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ‘ஜோ பிடன்’ கூறுவதை கேளுங்கள் – ப சிதம்பரம்

Credits The Indian Express

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநில வாக்காளர்கள், ‘பிரிவினையை தவிர்த்து ஒற்றுமையை தேர்வு செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் ‘அச்சத்தை தவிர்த்து நம்பிக்கையையும், பிரிவினையை தவிர்த்து ஒற்றுமையையும், புனைவுக் கதைகளைத் தவிர்த்து அறிவியலையும், குறிப்பாக பொய்களைத் தவிர்த்து உண்மையயும் நாங்கள் தேர்வு செய்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.

ஜோ பிடன் கூறியதை மேற்கோள் காட்டி, மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது இதனை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

 

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டென்,  மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, ‘முற்போக்கான கொள்கைகள், ஜனநாயக தேர்தலில் வெற்றியைப் பெற்று தரும்’ என நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28ம் தேதி தொடங்கப்பட்டு மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. நிதிஷ் குமார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, விகாஷீல் இன்ஸான் ஆகிய கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாக தேர்தலில் போட்டியிடுகின்றன.   இந்தக் கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்