Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருத்த மசோதா: பஞ்சாபைத் தொடரும் சத்தீஸ்கர்

Credits BBC

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநிலத்தில், சத்தீஸ்கர் விவசாய உற்பத்தி சந்தை திருத்த மசோதா 2020 வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க சிறப்பு அமர்வு நடத்தப்பட்டு சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்திருந்தது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் தொடர்பான சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய இந்த சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

எதிர்க்கட்சிகளும் சட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. பஞ்சாப் மாநில அரசு இந்தச் சட்டங்களுக்கு எதிரான வேளாண் தொடர்பான சட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

பஞ்சாப் சட்டப் பேரவை – வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றம்

தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில அரசும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடர்பான முன்று சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி வேனுகோபால் ட்விட்டரில், “காங்கிரஸ் தலைவர் அறிவுறுத்தியபடி, சத்தீஸ்கர் அரசு மோடி அரசின் கடுமையான விவசாய விரோத சட்டங்களை எதிர்கொள்ள, இன்று தொடங்கி சட்டசபையில் மாநில சட்டத்தில் திருத்தம் செய்யும்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

“வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டங்கள் பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளின் உரிமைகளை நிலைநிறுத்தும்.” எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும்

சத்தீஸ்கர் மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர் ரவீந்திர சௌபே, “விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே இந்தச் சட்டம் திட்டமிடப்படுகிறது. மத்திய அரசுடன் இந்த பிரச்சனை குறித்து மோதலில் ஈடுபட அல்ல.” என்று கூறியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்