Aran Sei

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை ஐஐடியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாதர் சங்கம் கோரிக்கை

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை ஐஐடியில் படிக்கும் தனது சக மாணவர் கிங் சுக்தேவ் சர்மா தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்று மேற்கு வங்க மாணவி மயிலாப்பூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக காவல்துறை 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

“2016 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் நான் சேரும் பொழுது எனது சக மாணவர் கிங் சுக்தேவ் சர்மா என்னை உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தினான். அப்போது கிங் சுக்தேவ் சர்மாவுடன் இணைந்து வேறு சில நபர்களும் என்னை துன்புறுத்தினார்கள். அப்போது அவர்கள் என்னை மிக மோசமாகப் படம் பிடித்து அந்த காணொளிகளைப் பரப்பி விடுவதாக கூறி என்னை பிளாக்மெயில் செய்தனர்” என்று பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வழக்கில் மு.க ஸ்டாலின் நேரடியாக தலையிடுமாறு ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள்

மேலும், “2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகுக்கு சென்னை ஐஐடி சார்பாக சுற்றுப்பயணம் சென்ற பொழுது என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்கள். ஐஐடியில் உள்ள ஆய்வகத்தில் எனது ஆடைகளைக் களைந்து என்னை படம்பிடித்து மிரட்டினார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்