Aran Sei

ஹத்ராஸ் வன்கொடுமை – ஆசாத்தை வெளிப்படையாக மிரட்டும் உயர் சாதியினர்

ஹத்ராஸ் வன்கொடுமையில் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினரை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, ஆசாத்தை காவல்துறையினர் தடுத்ததால் அவர் ஐந்து கிலோ மீட்டர் நடந்து வர வேண்டியிருந்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ஹத்ராசை அடைந்தபோது காவல்துறையினர் மீண்டும் தடுத்ததால் சந்திரசேகர் ஆசாத் அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நன்றி:என்டிடிவி

அங்கிருந்த வண்டியின் மீது ஏறிய ஆசாத் அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அதைத்தொடர்ந்து அவரை காவல்துறையினர் ஹத்ரசுக்குள் நுழைய அனுமதித்ததாக என்டிடிவி கூறுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஆசாத் அவர்களுக்க ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார் “நடிகை கங்கனா ரணாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கும் இந்த அரசு இவர்களுக்கு ஏன் வழங்க கூடாது” என்று கேள்வி எழுப்பினார்.

“தற்போது ஆட்சியில் உள்ள தலைமை, சிபிஐயை மக்களை பயமுறுத்தவே பயன்படுத்துகிறது. ஆகவே, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும்” என்று ஆசாத் கூறினார்.

முன்னதாக, சந்திரசேகர் ஆசாத் வருவதை அறிந்த இடைசாதியை சேர்ந்த இரண்டுபேர் (தாக்கூர்) அவர் வருகையை எதிர்த்து பாதிக்கப்பட்டோரின் வீட்டின் அருகே போராட்டம் நடத்தியதாக பத்திரிகையாளர் சதிக்கா திவாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் “அவனுக்கு (சந்திரசேகர் ஆசாத்) சிபிஐ, எஸ்ஐடி மீது நம்பிக்கை இல்லை. சட்டத்தின் மீதும் மேல நம்பிக்கை இல்லை” என்று ஆசாத்தை குறிப்பிட்டு சத்தமாக பேசுகின்றனர்.

“ஒருமுறை வந்து சந்தித்துவிட்டு போ. நாங்கள் உனக்கு நம்பிக்கை வர வைக்கிறோம். உன்னை சந்திக்கிறது உன் பெரிய அண்ணனுங்க வந்திருக்கானுக” என்ற மிரட்டும் வகையில் பேசுகின்றனர்.

அவர்களுக்கு பின்னால் காவல்துறையினர் எதுவும் செய்யாமல் நின்றிருப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்