Aran Sei

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு : ’நேர்மையான நோக்கத்துடன் தீர்வு காண விரும்புகிறோம்’ – விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, நாளை (டிசம்பர் 30) அமைச்சரவைக் குழுவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள, அழைப்பு விடுத்துள்ளது மத்திய அரசு.

நேற்று (டிசம்பர் 28) போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் சங்கங்களுக்கு விடுத்துள்ள அழைப்பு கடிதத்தில், மத்திய அரசு ஒரு தர்க்கரீதியான தீர்வு காண விரும்புவதாக விவசாயத்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் உறுதியளித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

அந்தக் கடிதத்தில், விவசாயிகள் சங்கங்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், “திறந்த மனதுடனும் நேர்மையான நோக்கங்களுடனும் இந்த பிரச்சினைகளுக்கு தர்க்கரீதியான ஒரு தீர்வைக் கண்டடைவதற்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது.” என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அக்கடிதத்தில் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதற்கும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துவதற்கும் செய்யவுள்ள முன்னெடுப்புகள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று தி இந்து தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டம் – ” பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு உண்மைகளை திரிக்கிறது”

மேலும், இந்த விடுபடல்கள் குறித்து, விவசாயிகள் சங்கங்கள் புகார் சொன்ன போதிலும், ஒன்றிய அரசின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

“ஒன்றிய அரசால் தெளிவற்ற முறையில் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு, விவசாயிகளின் எல்லா பிரச்சனைகளையும் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது.” என்று அகில இந்தியா விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?

“இந்த அரசு வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் முன்மொழிந்த கோரிக்கைகளை அரசு தெளிவாக புரிந்துக கொண்டதா என்று அறிய விரும்புகிறோம்.” என்று அகில இந்தியா விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் அவிக் சஹா தெரிவித்துள்ளார்.

`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்

நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு செல்லவுள்ளதாக ராஷ்ட்ரிய விவசாயிகள் மகாசங்கம் அறிவித்துள்ளது. “இந்த அழைப்புக் கடிதத்தில், விவசாய சட்டங்களில் திருத்தங்கள் செய்யவுள்ளதாக அரசு குறிப்பிடவில்லை. அதேநேரம், அவர்கள் அதை திரும்பப் பெறவுள்ளதாகவும் குறிப்பிடவில்லை.” என்று ராஷ்டிரிய விவசாயிகள் மகாசங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அபிமன்யு கோஹர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்