Aran Sei

நடிகை பார்வதி நடித்த படத்தில் ‘தேசவிரோத கருத்துகள்’ – திரையிட மறுத்த தணிக்கை வாரியம்

டிகை பார்வதி நடித்த ‘வர்தமானம்’ என்ற திரைப்படத்தில் தேசவிரோத கருத்துகள் உள்ளதாக கூறி, அப்படத்தை திரையிட கேரள பிராந்திய தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகை பார்வதியின் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் சித்தார்தா சிவா, ‘வர்தமானம்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், ரோஷன் மேத்யு, சித்திக் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஃபைஸியா சுஃபியா என்ற கதாப்பாத்திரத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவியாக பார்வதி நடித்துள்ளார்.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து, கேரள பாஜகவின் பட்டியல் வகுப்பினர் முன்னணியின் துணை தலைவரும், கேரள பிராந்திய தணிக்கை வாரியத்தின் உறுப்பினருமான சந்தீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “தணிக்கை வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் இன்று ‘வர்தமானம்’ என்ற திரைப்படத்தை பார்த்தேன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக போராட்டத்தில் தலித்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்படும் கொடுமைகள் தான் இப்படத்தின் கதை.” என்று கூறியுள்ளார்.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

மேலும், “நான் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். இதற்கு காரணம், இப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும் ஆர்யாடன் ஷௌக்கத் தான். அதேநேரம் உறுதியாக ஒன்றை சொல்கிறேன், தேசவிரோதம் தான் இப்படத்தின் நோக்கம்.” என்று சந்தீப் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதினார். ஆனால், சிறிது நேரத்தில் இந்த ட்வீட்டை, சந்தீப் குமார் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்

 

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிராந்திய தணிக்கை வாரியம் இத்திரைப்படத்தை திரையிட மறுத்துள்ள நிலையில், மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை குழுக்கு திரைப்படத்தை அனுப்ப, படக்குழு முடிவு செய்துள்ளதாக டூல்நியூஸ் என்ற மலையாள இணையதளம் தெரிவித்துள்ளது.

ஒரு இஸ்லாமிய ஆணும், இந்து பெண்ணும் முத்தமிட்டால்.. – அதனால் என்ன?

இந்த திரைப்படத்தின் திரைக்கதையாசிரியரும் தயாரிப்பாளருமான ஆர்யாடன் ஷௌக்கத், கேரள மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சியின் தலைவராக உள்ளார்.

2008 ஆம் ஆண்டு, இவர் எழுதி தயாரித்த ‘விலாபங்கள் குப்புறம்’ என்ற திரைப்படம், குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் இருந்து தப்பி, கேரளம் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றியது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்