Aran Sei

இராவணன் பற்றிய கருத்து – மத உணர்வைப் புண்படுத்துவதாக சைஃப் அலிகான் மீது வழக்கு

ராவணன் குறித்த கருத்து மத உணர்வுகளைப் புண்படுத்துபடியாக உள்ளதாக நடிகர் சைஃப் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஓம் ரவுத் இயக்கத்தில் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில், இராவணன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சைஃப் அலிக் கானும், இராமர் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபாஸும் நடிக்கவுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தை பற்றி, சமீபத்தில் சைஃப் அலிகான் மும்பை மிரர்  இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரு அரக்க ராஜாவாக நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் நாங்கள் அவரை மனிதாபிமானம் உள்ளவராக காட்டுவோம். இராவணனின் சகோதரி சூர்பனகையின் மூக்கை லக்ஷ்மனன் வெட்டியதற்கான பழிவாங்கும் நடவடிக்கைதான் சீதையைக் கடத்தியதும், இராமனுடனான போரும்.” என்று சைஃப் அலிகான் கூறியிருந்தார்.

இந்துத்துவத்தை இழிவு செய்வது, இந்து மதத்தை இழிவு செய்வதாகாது – வழக்கறிஞர் வாதம்

இதற்குச் சமூக வலைதளங்களில் எழுந்த கடும் விமர்சனங்களையும் கண்டனத்தையும்  தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டு தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சைஃப் அலிகானின் இந்தக் கருத்து எதிர்த்து, உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா: “கொரோனா இருக்கட்டும், கோயிலைத் திற” – பாஜக அமளி

அந்த மனுவில், டிசம்பர் 6 ஆம் தேதி வெளிவந்த சைஃப் அலி கானின் நேர்காணல் ஒன்றில், இராமின் தம்பி லக்ஷ்மன் இராவணனின் சகோதரி சூர்பனகையின் மூக்கை வெட்டியதால் தான் சீதை கடத்தப்பட்டால் என்று கூறி சைஃப் அலி கான் இராவணனை நியாயப்படுத்தியுள்ளார் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சைஃப் அலி கானின் நேர்காணல் சனாதன தர்மத்தின் மீதான நம்பிக்கையை எதிர்க்கும் விதமாக உள்ளது என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.  மனுதாரரைத் தவிர, மேலும் 6 பேரும் இணையத்தில் இந்த நேர்காணலைப் பார்த்துள்ளார்கள் என்றும் அந்தக் கருத்துகள் அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படியாகவுள்ளது என்றும் மனுதாரர் கூறியுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .

எதிர்ப்புகள் இந்து மதத்தையும் இந்தியாவையும் வடிவமைத்த வரலாறு – ரொமிலா தாப்பருடன் நேர்காணல்

கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் அடுத்த விசாரணை , வரும் டிசம்பர் 23 ஆம் தேதிக்கு நடைபெறவுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்