Aran Sei

ராஜஸ்தான், சத்தீஸ்கரை தொடர்ந்து, சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்துசெய்தது பஞ்சாப்

credits : the wire

த்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) அளித்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை மாநில அரசு வாபஸ் பெற்றால், மாநில அரசின் அனுமதியின்றி யார் மீதும் சிபிஐயால் வழக்குப் பதிவு செய்ய முடியாது. மாநில எல்லைகளுக்குள் அதனுடைய அதிகாரங்களை முற்றிலும் இழக்க நேரிடும்.

சிபிஐயின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐ-க்கும் வழங்குகிறது.

டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொது ஒப்புதல் (General Consent) பெற்றிருப்பது அவசியம். சிபிஐக்குப் பொது ஒப்புதல் மறுக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் சி.பி.ஐ வழக்கு விசாரணை செய்ய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகியவை சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை ஏற்கெனவே திரும்பப் பெற்றிருக்கின்றன. இதையடுத்து சமீபத்தில் மகாராஷ்ட்ரா, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் சி.பி.ஐ-க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளன.

இந்தநிலையில், தற்போது சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை ரத்து செய்யும் மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப்பும் இணைந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைகளை நடத்துவதற்காக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை ரத்துசெய்வதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், எதிர்காலத்தில் சிபிஐயால் நடத்தப்படும் எந்தவொரு வழக்கிலும் எந்தவொரு விசாரணையிலும் பஞ்சாப் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்