Aran Sei

” வயது வந்த பெண்ணுக்கு விருப்பப்படி வாழ உரிமை உள்ளது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் உயர்நீதிமன்றம் - Image Credit : Indian Express

முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்து கொண்ட 21 வயதான இந்து பெண் ஷிக்கா, தனது விருப்பப்படி வாழ உரிமை உள்ளது என்று அலகாபால் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அந்தப் பெண்ணின் கணவர் மீது ஆள்கடத்தல் வழக்கு செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. எட்டா முதன்மை நீதிபதி ஷிக்காவை குழந்தைகள் நலன் கமிட்டியிடம் டிசம்பர் 7-ம் தேதி ஒப்படைத்தது. அடுத்த நாளே, குழந்தைகள் நலன் கமிட்டி ஷிக்காவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தது

இதற்கு எதிராக ஷிக்கா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

அந்த மனு மீதான விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் நக்வியும் விவேக் அகர்வாலும், ஷிக்காவுடன் பேசினர். அப்போது அவர், தனது பிறந்த நாள் 04.10.1999 என்றும் தான் வயது வந்த நபர் என்றும், திருமண உறவில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிச் சான்றிதழை காட்டிய பிறகும் ஷிக்கா ஒரு வயது வந்த நபர் என்ற உண்மையை மஜிஸ்திரேட் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் வேறு எந்த ஒரு ஆதாரமும் இரண்டாம் பட்சமானது, அவற்றை நம்பக் கூடாது என்று கூறியுள்ளது.

“எட்டா முதன்மை நீதிபதியின் செயல் சட்ட விதிகள் பற்றிய தெளிவின்மையை காட்டுகிறது” என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

டிசம்பர் 18-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஷிக்கா வயது வந்தவர் என்பதாலும், தனது கணவர் சல்மான் என்ற கிரணுடன் வாழ விரும்புவதாலும், “மூன்றாவது தரப்பால் எந்த தடை அல்லது குறுக்கீடு இல்லாமல் அவர் தன் விருப்பப்படி வாழ்வதற்கு சுதந்திரம் உள்ளது” என்று கூறியுள்ளது.

ஷிக்காவும் அவரது கணவரும் தமது வீட்டுக்குப் போவது வரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்