Aran Sei

பழங்குடியினர் உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் குழு – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

ழங்குடியினர் உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியைப் பரிசோதிக்க மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜே.ஜே. மருத்துவமனையில் இருந்து மீண்டும் தலோஜா சிறைக்கு ஸ்டான் சுவாமி அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த உத்தரவு வந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே. கதவல்லா மற்றும் சுரேந்திர தவாடே அடங்கிய அமர்வு, “ஸ்டான் சுவாமியை மீண்டும் ஜே.ஜே. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டான் சுவாமியைப் பரிசோதனை செய்ய நரம்பியல் மருத்துவர், ஈ.என்.டி (காது, மூக்கு, தொண்டை) மருத்துவர், எலும்பியைல் மருத்துவர், பொது மருத்துவர் கொண்ட மருத்துவர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு ஜே.ஜே. மருத்துவமனை டீனிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தி வயர் தெரிவித்துள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு : அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவு

மேலும், வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் மே 21 ஆம் தேதி, ஸ்டான் சுவாமியைக் காணொளிமூலம் ஆஜர்படுத்துமாறு சிறை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் ஸ்டான் சுவாமிக்கு ஏற்பட்ட மருத்துவ பிரச்னைகளை ஸ்டான் சுவாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மிஹிர் தேசாய் பட்டியலிட்டுள்ள நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஜே.பி. யாக்னிக், ஸ்டான் சுவாமி புகார் எதுவும் தெரிவிக்கவில்லை, உண்மையில் அவர் ‘திருப்தி’யாக இருப்பதாக தெரிவித்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்