ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயன்றதாக பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
’பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டவாறு மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திலும் அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்றதாக டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி 14 மாதங்கள் தடுப்பு காவலில் இருந்து கடந்த 13-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அறிவித்தது. அதற்கு முதல் நாள் பாதுகாப்பு நடவடிக்கையாக மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். விடுதலைக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று முதல்முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய மெஹ்பூபா முஃப்தி, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் கொடியும் மீண்டும் வழங்கப்பட்டால் அந்தக் கொடியை (இந்திய தேசியக்கொடியையும்) ஏந்துவேன்” என்று கூறினார்.
“எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்ற மாட்டேன், இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது.” எனத் தெரிவித்திருந்தார்.
Mehbooba Mufti, PDP: My flag is this (points to the flag of J&K kept on the table in front of her). When this flag comes back, we'll raise that flag (tricolour) too. Until we get our own flag back, we won't raise any other flag…This flag forged our relationship with that flag. pic.twitter.com/wIbxrnaYmS
— ANI (@ANI) October 23, 2020
தேசியக் கொடி குறித்து மெஹ்பூபாவின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மூவர்ணக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#WATCH: Bharatiya Janata Party (BJP) workers hoist the national flag at Peoples Democratic Party (PDP) office in Jammu. #JammuAndKashmir pic.twitter.com/wCCYpzCDhA
— ANI (@ANI) October 26, 2020
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த சிலர் லால் சௌக்-ல் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்ற போது காவலர்களால் தடுக்கப்பட்டதாகவும், அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH | Jammu and Kashmir: Police detain Bharatiya Janata Party (BJP) workers who were allegedly trying to hoist national flag at clock tower in Lal Chowk, Srinagar. pic.twitter.com/j8rUFH0kco
— ANI (@ANI) October 26, 2020
மெஹ்பூபா முப்தி பேட்டி அளித்த மறுநாள், மக்கள் ஜனநாயக் கட்சி அலுவலகம் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, அலுவலகத்தில் அந்த நபர்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற முயன்ற போது போலீசாரால் தடுத்து அழைத்துச் செல்லப்பட்டார்கள் என தி பிரிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.
மெஹ்பூபாவின் கருத்துக்குப் பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பாஜக அரசியல் விவகாரப்பிரிவுப் பொறுப்பாளர் அஸ்வானி குமார், மெஹ்பூபா முப்தியின் பேச்சு தேசவிரோதமானது என்று குற்றம் சாட்டியதோடு, மக்கள் ஜனநாயக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பதாக தி இந்து செய்தித்தளம் கூறியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில், “மெஹ்பூபா முப்தியின் கருத்துகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம். மூவர்ணக் கொடியை அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. மூவர்ணக் கொடி இந்தியாவின் பெருமை. அதுவே இந்தியாவின் அடையாளம்.” என்று தெரிவித்துள்ளார்.
महबूबा मुफ्ती के बयानों की हम भर्त्सना करते हैं। तिरंगे का अपमान बिल्कुल अस्वीकार्य है। तिरंगा भारत की शान है, तिरंगा भारत की पहचान है।
— Prakash Javadekar (@PrakashJavdekar) October 26, 2020
இந்நிலையில், மெஹ்பூபா முப்தி தனது ட்விட்டரில், “இந்தியாவின் மூவர்ணக் கொடி பன்முகத்தன்மையையும் அமைதியான முறையில் ஒன்றுபட்டு வாழ்வதையும் குறிக்கிறது. தேசியக் கொடியை யாராவது அவமதித்துள்ளார்கள் என்றால் அது பாஜகவினர் மட்டுமே.” என்று கூறியுள்ளார்.
?? flag stands for diversity & peaceful coexistence amongst all. If anyone has insulted the tiranga it is BJP that persecutes minorities & sows division & hatred. The ?? flag was disrespected the day BJP leaders carried it to justify rapists of a 9 year old. Spare me the lessons https://t.co/ABle1v62y5
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 24, 2020
”பாஜகவினர்தான் சிறுபான்மையினரைத் துன்புறுத்தி, மக்களிடம் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கிறார்கள். 9 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றவாளிகளை நியாயப்படுத்த, பாஜக தலைவர்கள் இந்திய தேசியக் கொடியை உயர்த்தியபோதே கொடிக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது.” என்று மெஹ்பூபா முஃப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.