Aran Sei

கட்சி விரோதச் செயல் – தலைவர்கள் மீது பாஜக நடவடிக்கை

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மூன்று எம்.பிக்களுக்குப் பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச இடைத்தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மூன்று தலைவர்களிடம் விளக்கம் கேட்டு அம்மாநில பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தில் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தி உருவாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வர், அவரது மகன் முண்டிட் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஜ்ராஜ் சிங் சிகர்வார் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

“அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது. இது மிக ஒழுக்கக்கேடான ஒன்று. தங்களின் செயல் குறித்து தலைமைக்குத் தெரியவந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென” அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏழுமுறை எம்.எல்.ஏ- வாக இருந்த ஷெஜ்வார் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டுள்ளார். 2018 ல் நடைபெற்ற விதான் சபா தேர்தலில் சஞ்சியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் முடித் அப்போதைய காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சவுத்ரியிடம் தோல்வியடைந்தார்.

“ஒருவருக்கு எதிராகப் புகார் வரும்போதெல்லாம் அவர்களிடமிருந்து பதில் கோரப்படுவது ஒரு வழக்கமான செயல். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நான் கூறுவேன்” என்று ஷெஜ்வர் தி இந்துவிடம் கூறியுள்ளார்.

புதிய வேட்பாளர் மீது யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. எந்தக் கிளர்ச்சியும் நடைபெறவில்லை. தொழிலாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ஷெஜ்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் எம்எல்ஏ சத்யப்பால் சிங். கட்சி விரோத நடவடிக்கை மேற்கொண்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சத்யப்பாலின் சகோதரர் சதீஷ் சிகர்வார், சமீபத்தில் காங்கிரசுக்கு மாறி குவாலியர் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட்டார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் களமிறங்கும் இடங்களில் சதிச்செயல்கள் எதுவும் நடைபெறாமல் விழிப்புடன் இருப்பதாக பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்