Aran Sei

’இஸ்லாமிய வெறுப்பாளருக்கு பாஜக தேசிய பதவியா?’ அரபு நாட்டினர் கண்டனம்

credits: dnaindia.com

ரபு நாட்டு பெண்களை இழிவாக பேசிய தேஜஸ்வி சூர்யா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழு பட்டியலை பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் வெளியிட்டார்.

கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக இருந்த பூனம் மகாஜனின் பதவி பறிக்கப்பட்டு கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேஜஸ்வி ட்விட்டரில், ”என்னைப் போன்ற இளம் வயதினருக்கு, உலகில் மிகப்பெரிய கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவராக பொறுப்பளிப்பது என்பது பாஜக-வில் மட்டுமே சாத்தியம்.” என்று கூறி பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“சில நூற்றாண்டுகளாக அரபு நாட்டைச் சேர்ந்த 95% பெண்கள் ஆர்கசமே அடைந்ததில்லை. தாய்மார்கள் உடலுறவின் விளைவாக மட்டுமே குழந்தைகளை ஈன்றெடுக்கிறார்கள், அன்பின் வெளிப்பாடாக இல்லை” என தேஜஸ்வி பதிவிட்டிருந்தார்.

2015-ம் ஆண்டு பதிவு செய்த இந்த ட்வீட் கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. அரபு நாட்டின அரசு குடும்பத்தில் முக்கியமான நபர், “மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியா- அரபு அமீரகத்திற்கு இடையான உறவு பரஸ்பரம் மரியாதையுடன் திகழ்ந்து வந்திருக்கிறது. உங்களது பாராளுமன்ற உறுப்பினர் இப்படிப் பொதுவெளியில் எங்கள் தேசப் பெண்களை அவமதிப்பதை அனுமதிக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

நூரா அல்குராய்ர் என்பவர் ட்விட்டரில், “இந்தியாவில் பல பெண் தலைவர்கள் இருந்தும் பெண்களுக்கு மரியாதை அளிக்க தெரியாமல் வளர்ந்துள்ள தேஜஸ்வி சூர்யா மீது நான் பரிதாபம் கொள்கிறேன். ஒருவேளை அரசு உங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி அளித்தால் தயவு செய்து அரபு நாடுகளுக்குச் செல்லாதீர்கள். அங்கு உங்களுக்கு வேறு விதமான வரவேற்பு கிடைக்கும்” என கூறியிருந்தார்.

தொடர்ந்து தேஜஸ்வி சூர்யா ட்விட்டரில் இருந்து அந்த பதிவை நீக்கினார்.

2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட மற்றொரு பதிவில், “பாஜக இந்துக்களுக்கான கட்சியாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில் ஒரு இந்துத்துவ கட்சியாக வேண்டும். காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கன கட்சி என்ற உண்மையை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கூறியிருக்கிறார்.

 

அரபு பெண்களை இழிவு படுத்தி பதிவு வெளியிட்ட தேஜஸ்விக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பொறுப்பு அளித்திருப்பதை எதிர்த்து அரபு நாட்டின் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர், “இஸ்லாமிய வெறுப்பை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ள இந்தியாவின் இந்துத்துவ ஆட்சியாளர்கள் உடனான உறவினை அரபு நாட்டினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மிகவும் அருவருப்பானது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்