Aran Sei

’பாஜக ஆடுமாடுகளை வாங்குவது போல, எம்எல்ஏக்களை வாங்குகிறது’ – திக்விஜய சிங்

ந்தையில் ஆடு மாடுகள் விற்கப்படுவது போல, இப்போது எம்.எல்.ஏக்கள் விற்கப்படுகின்றனர் என்றும் மேற்கு வங்கத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 27), சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில், சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோராவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் திக்விஜய சிங் பங்கேற்றுள்ளார்.

மேற்குவங்க அரசை சீர்குலைக்க முயலும் பாஜக : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மேற்கு வங்க மாநிலத்தில், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பாஜக-வில் சேர்ந்து வருவது குறித்து செய்தியாளர் கேட்டபோது, ​​“இந்த விஷயங்கள் அனைத்துமே பணத்தால் நடத்தப்படும் ஒரு விளையாட்டு. பெரும் அளவிலான கறுப்புப் பணத்தை பாஜக குவித்து வைத்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் இந்த எம்.எல்.ஏக்களை வாங்கும் குதிரை பேரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.” என்று விமர்சித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

“முன்பு சந்தையில் விலங்குகள் விற்கப்பட்டது போல இப்போது எம்.எல்.ஏக்கள் விற்கப்படுகிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறிவிட்டன என்றும் மிக விரைவில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும் என்றும் திக்விஜய சிங் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்