Aran Sei

பீகார் : மூன்று மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டரில் கொலை

credits : indian express

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் மூன்று மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டர் செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்னாவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பராச்சட்டி என்னும் வனப்பகுதியில் அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொல்லப்பட்ட மூன்று பேர்களில் ஒருவர் மாவோயிஸ்டுகளின் படைத்தலைவரான அலோக் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது (அவரைப் பற்றிய தகவல் கொடுப்பவருக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடமிருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கியும், ஒரு இன்சாஸ் (இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி) துப்பாக்கியும் கைபற்றப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை – மமதா அறிவிப்பு

இந்த என்கவுண்டரை  அதிரடி கமாண்டோ பட்டாலியன் (commando battalion for resolute action) அல்லது கோப்ராவின் 205-வது பட்டாலியன் பீகார் பீகார் மாநில காவல்துறையுடன் இணைந்து  நடத்தியுள்ளது.

கோப்ரா என்பது இந்தியாவில் உள்ள மாவோவிஸ்ட்,  நக்சலைட் அமைப்புகளுடன்  மோதும் மத்திய ரிசர்வ் காவல்படையின் ஒருபிரிவாகும். இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்தியேக கொரில்லா தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் மாவோயிஸ்ட் குழுக்களை கோப்ரா ஓடுக்குகிறது. இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை கோப்ரா தான்.

”அதிகாலை நேரத்தில் மாஹுரி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துக்கொண்ட மாவோயிஸ்டுகளை நோக்கி 205 வது பட்டாலியன் கோப்ரா படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக’’ என்டிடிவி கூறியுள்ளது.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

 

கடந்த நவம்பர் 3-ம் தேதி கேரளாவில் தண்டர்போல்ட் கமாண்டோக் குழுவால், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சார்ந்த வேல்முருகன் மாவேயிஸ்ட் என கூறப்பட்டு வயநாடு பகுதியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இது ஒரு போலி கவுண்ட்டர் என வேல்முருகனின் குடும்பம் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்