Aran Sei

‘பாஜக தான் எல்ஜேபியின் லாபத்தை பார்க்கமுடியும்’ – நிதிஷ் குமார்

சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியுடைய (எல்ஜேபி) லாபத்தை பாஜகவால் மட்டுமே பார்க்க முடியும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமார், நேற்று (நவம்பர் 12) கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், எல்ஜேபி கட்சி ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

பீகார் தேர்தல் – படுதோல்வியைச் சந்தித்த எல்ஜேபி – பாதாளத்தில் தள்ளிய சிராக் பஸ்வான்

தேர்தல் பிரச்சாரங்களின் போது, எல்ஜேபி கட்சியின் தலைவர் சிராக்  பாஸ்வான், நிதீஷ்குமாரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கவே, ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகப் பலமுறை கூறியுள்ளார்.

நேற்று (நவம்பர் 12), முதல்வர் நிதிஷ் குமார், தனது கட்சி தலைமையகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்குகளை எல்ஜேபி கட்சி பிரித்ததா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஊடகங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியும் எங்கள் கட்சிக்காரர்களும் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் இதைப் பற்றி எழுதி வருகின்றன. எங்கே என்ன நடக்கிறது?  எங்கள் வாக்குகள் எப்படி பிரிக்கப்பட்டன? எங்கே தவறு நடந்தது என்பதை எங்களது கட்சி பார்க்கும். ” என்று கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் – ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

”அவர்கள் (எல்ஜேபி) பாஜக வேட்பாளர்களின் வாக்குகளுக்குப் பாதிப்பை கொடுத்ததை விட ஐக்கிய ஜனதா தளத்திற்குதான் பெரிய பாதிப்பைக் கொடுத்தார்கள் . பாஜக மட்டும் தான் இதன் லாபத்தை பார்க்க முடியும் . நாங்கள் கூட்டணி கட்சிகள். ஒன்றாக வேலை செய்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த தேர்தலில் சிலர்  குழப்பத்தை எற்படுத்துவதில் வெற்றிப்பெற்றுள்ளார்கள்.” என்று சிராக் பாஸ்வானை குறிப்பிடாமல் நிதிஷ்குமார் மேலும் கூறியுள்ளார். “தேர்தலில் யார் என்ன சொன்னார்கள், யார் என்ன செய்தார்கள் (வாக்கெடுப்பில்) என்பதை ஊடகங்கள் ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

முதலமைச்சர் பதவிக்கு உரிமை கோரியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, ​​“நான் எந்த உரிமை கோரலயும் செய்யவில்லை. எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவைப் பின்பற்றுவேன்.அந்தக் கூட்டணிக்காக  அரசை நடத்துவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களை மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது. இதன் மூலம் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்