Aran Sei

பீகார்: பாதுகாப்பையும் மீறி முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர்

காவல்துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமாரை, பொது நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார்.

தனது சொந்த மக்களவைத் தொகுதிகளாக இருந்த பார்ஹ் மற்றும் நாளந்தாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வார காலத்துக்கும் மேலாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 27), தனது சொந்த கிராமமான பக்தியார்பூருக்கு சென்றுள்ள நிதீஷ் குமார், அங்கிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜி சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். கையில் மாலையுடன் ஷீல்பத்ரா யாஜி சிலைக்கு அருகே நிதிஷ் குமார் சென்றுபோது, பலத்த காவல்துறை பாதுகாப்பையும் மீறி அவரை நெருங்கிய ஒரு இளைஞர், அவரது முதுகில் பலமாக தாக்கியுள்ளார்.

இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதனால், அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்துள்ள நிதிஷ் குமாரை மீண்டும் தாக்குவதற்காக அவர் கையை ஓங்கியபோது, அங்கிருந்த காவலர்கள், அந்த இளைஞரை பிடித்து அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையின் முடிவில், அவரது பெயர் சங்கர் வர்மா என்பதும், அவர் சற்று மனநிலையை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே தேர்வுகளில் முறைகேடு: வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து போராட்டம் – முடங்கியது பீகார்

முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது தொடர்பாகவும் துறையில் ரீதியில் விசாரணை நடத்தப்படுவதாக பீகார் மாநில தலைமை காவல்துறை இயக்குனர் கூறியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்