Aran Sei

“சூத்திரர்கள் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்” – பிரக்யா சிங் தாக்கூர்

credits : indian express

2008-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவரும் பாஜகவின் மத்தியப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரும், சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குச் சொந்தக்காரருமான பிரக்யா சிங் தாக்கூர் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த ஷத்ரிய மகாசபை நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் ”நமது தர்ம சாஸ்திரத்தின் படி நமது சமூகம் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பிராமணரைப் பிராமணர் என அழைத்தால், அவர்கள் தவறாக நினைப்பதில்லை;  ஒரு ஷத்ரியரை ஷத்ரியர் என அழைத்தால், அவர்கள் தவறாக நினைப்பதில்லை;  ஒரு வைசியரை வைசியர் என அழைத்தால், அவர்கள் தவறாக நினைப்பதில்லை. ஆனால் ஒரு சூத்திரரை சூத்திரர் என அழைத்தால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். ஏன் இவ்வாறு சிந்திக்கிறார்கள்? அறியாமையினால்தான், அவர்களுக்கு இது (சமூக அமைப்பு) புரியவில்லை” என் அவர் தெரிவித்துள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தனியாக சட்டம் இயற்றி, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது அந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள பிரக்யா சிங், தேசத்திற்காக உழைப்பவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

”இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருந்தால்தான் ஏழைகளுக்குப் பயனளித்து அவர்கள் வாழ்வை மேம்படுத்தும், இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது” எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

”ஷத்ரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து நிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்து இந்திய ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நமது தேசத்திற்காக சண்டையிடவும், தேசத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என பிரக்யா சிங் கூறியுள்ளார்.

விவசாயப் போராட்டங்கள் குறித்துப் பேசிய அவர் “விவசாயிகள் எனும் பெயரில் போராட்டம் செய்யும் அனைவருமே தேச விரோதிகள்தான். அவர்கள் விவசாயிகள் அல்ல. ஷாகின் பாக் போராட்டத்தில் நடந்ததுபோல காங்கிரஸ்காரர்களும் இடதுசாரிகளும் விவசாயிகள் எனும் பெயரில் தவறான தகவல்களைப் பரப்பி தேசத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகின்ற வேலையையும் செய்து வருகின்றனர்” என அவர் மேடையில் பேசியுள்ளார்.

வலுதுசாரிகள் எதிர்ப்பால் மீண்டும் சர்ச்சை – விளம்பரத்தை நீக்கியது தனிஷ்க் நிறுவனம்

கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் கண்டிக்கப்பட்ட போதிலும், பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். மக்களவையில் நடந்த ஒரு விவாதத்தின் போது மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று பிரக்யா சிங் குறிப்பிட்டது மக்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது.

சர்ச்சையில் சிக்கிய மீரா நாயரின் ’சூட்டபிள் பாய்’ – இந்து மதத்தை புண்படுத்துவதாக வழக்கு

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக “தன்னுடைய ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதை உணர்ந்ததால் மம்தா பானர்ஜி விரக்தியடைந்துள்ளார். அவருக்கு ‘பைத்தியம் பிடித்து’ விட்டது” என்று செய்தியாளர்களிடம் சர்ச்சைக்குரிய பதிலை பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்