Aran Sei

பீமா கோரேகான் வழக்கு – பார்வை குறைபாடுள்ள நவ்லாகாவுக்கு கண்ணாடி தர மறுப்பு

பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள கௌதம் நவ்லாகாவின் கண்ணாடி சிறையில் திருடப்பட்ட பிறகு, சிறை அதிகாரிகள் அவருக்கு புதிய கண்ணாடி கொடுக்க மறுப்பதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டான் ஸ்வாமி, ஆனந்த் டெல்டும்பே, ஹனி பாபு, சாகர் கார்கே, கௌதம் நவ்லாகா மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

மனித உரிமைகள் ஆர்வலரான நவ்லாகா, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய புலானய்வு முகமை, கௌதம் நவ்லாகாவிற்கு பாகிஸ்தான் உளவுத்துறையோடு தொடர்பிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

எழுபது வயதான நவ்லாகாவிற்கு, சில உடல்நிலை பிரச்சினைகள் இருக்கின்றன. பார்வை குறைபாடு இருப்பதால் அவருக்கு கண்ணாடி இல்லாமல் பார்வை தெரியாது. இந்நிலையில் கௌதம் நவ்லாகாவின் கண்ணாடி நவம்பர் 27 அன்று சிறையில் திருடப்பட்டுள்ளது.

‘வரவர ராவ் பேச்சாளர்தான் ஆனால் அர்னாப் கோஸ்வாமி போல் கத்த முடியாது’ – வேணுகோபால் ராவ்

இது குறித்து கௌதமின் மனைவி சபா ஹுசைன், “கண்ணாடி இல்லாமல் கௌதமிற்கு கண் தெரியாது எனவும், கண்ணாடி பார்சல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனவும் அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என சிறை அதிகாரிகளிடம் தகவல் சொல்லியிருந்தோம். இருப்பினும், கண்ணாடி பார்சலில் வந்த பிறகும் அதை வாங்கிக் கொள்ள சிறை அதிகாரிகள் மறுத்திருக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் “தன்னைச் சுற்றி இருப்பவற்றை பார்க்க முடியாததால், கௌதமின் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாக” சபா ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஸ்டேன் சாமிக்கு உறிஞ்சுக் குழல் வழங்கப்பட்டது – ஒரு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு நடவடிக்கை

நடுக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உறிஞ்சுக் குழலும், குவளையும் கொடுக்க மறுத்த சிறை அதிகாரிகள் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்த பிறகு, சில நாட்களுக்கு முன் தான் ஸ்டான் ஸ்வாமிக்கு உறிஞ்சு குழலை கொடுத்தனர். சிறையில் இருக்கும் செயற்பாட்டாளர் – கவிஞர் வரவர ராவ் உடல் நிலை மோசமாகியிருந்ததால் அவரை நானாவதி மருத்துவமனைக்கு மாற்றச் சொல்லி மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன அல்லது விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்