உத்தர பிரதேச பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாகச் சேர்க்க கோரி தாக்கல் செய்துள்ள மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரம்ம ஷங்கர் ஷாஸ்த்ரி ”ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக, பகவத் கீதை ஒரு பாடாமாக்கப்பட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.
திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – மத்திய பிரதேச அரசு முடிவு
இந்த வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சவுரப் லவானியா அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறான புரிதலுடன், தெளிவற்ற முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் மனுதாரர் பகவத் கீதையை இடைநிலை கல்வியில் பாடமாகச் சேர்க்க விரும்பினால், அவர் உத்தரபிரதேச அரசின் உயர்நிலைகல்வி அல்லது இடைநிலைக் கல்வி வாரியத்தை அனுகலாம் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில், பகவத் கீதையைப் பாடத்திட்டத்த்தின் ஒரு பகுதியாக்க விரும்பும் கல்வி வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிடம் சென்று விண்ணப்பிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.