Aran Sei

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

credits : pti

”எங்கள் (பஜ்ரங் தளம்) உறுப்பினர்களோடு சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர்கள் பதிவாளர் வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனர். நாங்கள் அவர்களைத் துரத்திச் சென்று ரவிதாஸ் கோவிலுக்கு அருகே வைத்து பிடித்தோம்” என்று பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாக நேஷ்னல் டெய்லி  செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the wire
credits : the wire

உத்தரபிரதேச மாநிலம் மோரதாபாத்தில் திருமணத்தைப் (கலப்பு திருமணம்) பதிவு செய்ய சென்ற ரஷித் மற்றும் அவரது சகோதரரை சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தர பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

லவ் ஜிகாத் என்ற பெயரில் திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரப்பிரதேச அமைச்சரவை இயற்றிய சட்டத்திற்குக் கடந்த மாதம் 27 ஆம் தேதி, அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தப் பின்னர் பலர் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியைத் தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள் அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் என எண்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

காவல் நிலைய வளாகத்திற்குள் 22 வயது பெண்ணைச் சுற்றி பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“உன்னுடைய மதத்தை மாற்ற  மாவட்ட நீதிபதியிடம் வாங்கிய ஒப்புதலை என்னிடம் காட்டு” என்று மிரட்டுகின்றனர்.

“லவ் ஜிகாத்” சட்டங்கள் – ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு

“உன்னைப் போன்ற பெண்களுக்காக தான் லவ் ஜிகாத் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது ”என பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணிடம் கூறுகின்றனர்

செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண் ”எனக்கு 22 வயது ஆகிறது, எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கடந்த ஜுலை 24-ம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகிறது ” என்று தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளதையும் அவர் கூறியுள்ளார்.

சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் திருமணம் நடைபெற்றது என கூறிய அந்த பெண்ணின் கருத்துக்குப் பதிலளித்த காவல்துறை அதிகாரி அஜய் கவுதம் “விசாரணையின் போது அனைத்தும் வெளிவரும்” என்றும், “நீதிமன்றத்தில் அந்தப் பெண் விரும்புவதைச் சொல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்ததாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

”நாங்கள் இருவரையும் ( ரஷித் மற்றும் அவர் சகோதரர்) கைது செய்துள்ளோம், வழக்கை முழுமையாக விசாரிப்போம் ”என்று மூத்த போலீஸ் அதிகாரி வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

பீகாரில் இஸ்லாமிய சிறுமி எரித்துக் கொலை – ராகுல் காந்தி கண்டனம்

பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள், உள்ளூர் ஊடகங்களுடன் பேசுகையில், டெஹ்ராடூனைச் சேர்ந்த ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் ஆணுடன் மதமாற்றம் மற்றும் நீதிமன்ற திருமணம் செய்வதற்காக வந்துள்ளனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் வந்துள்ளதாக கூறியுள்ளனர். “எங்கள் உறுப்பினர்களோடு சம்பவ இடத்திற்கு வந்தபோது, அவர்கள்  வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனர். நாங்கள் அவர்களைத் துரத்திச் சென்று ரவிதாஸ் கோவிலுக்கு அருகே வைத்து பிடித்தோம்” என்று பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தலைவர் கூறியதாக நேஷனல் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ் ரஷித் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குற்றம் நிருபீக்கப்பட்டால் அவர்கள் இருவருக்கும் 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கப்படும்..

லவ் ஜிகாத் சட்டம் அமலுக்கு வந்தப் பின்னர் முதன் முதலாக பரேலியியைச் சேர்ந்த  21 வயது இளைஞர் மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தச் சட்டத்தின் கீழ் சீதாபூரில் 8 பேர் மீதும் , மாவுவில் 14 பேர் மீதும், முசாபர்நகரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்