Aran Sei

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

ஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன் என இந்தியாவின் ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகனை, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பஜ்ரங் தளம் அமைப்பை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து தடை செய்தால், அந்நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளம் உறுப்பினர்களால் நேரடியாக தாக்கப்படலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவினர் எச்சரிதுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

இந்த ஆண்டு தொடக்கத்தில், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் ’ஆபத்தான அமைப்பு’ என்று பஜ்ரங் தளம், ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை அமைப்பை, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், கருத்துக்களை பதிவு செய்வதில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இயங்க பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பதென்பது இந்தியாவில் ஃபேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிப்படைய செய்வது மட்டுமின்றி இந்தியாவை ஆளும் இந்துத்துவ கோட்பாட்டை கொண்டுள்ள அரசியல்வாதிகளை ஆத்திரப்படுத்தும் செயல் என ஃபேஸ்புக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

மேலும், இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நபர்களால் உடல் ரீதியான தாக்குதல்களை கூட சந்திக்க நேரலாம் என பாதுகாப்புக் குழுவால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன் நாடாளுமன்ற நிலைக்குழுவால் விசாரிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கப்படவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஷி தரூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையை சுட்டிக்காட்டி பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தடை செய்தால் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் பாதிப்பும் ஏற்படும் என அஞ்சி, பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தொடர்ந்து செயல்பட அனுமதியளித்திருப்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகன், ஃபேஸ்புக்கின் உண்மை அறியும் குழுவின் ஆய்வில் பஜ்ரங் தளத்தின் பதிவுகள் எதுவும் ஃபேஸ்புக்கின் சமூக வலைதள விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று பதிலளித்துள்ளார்.

கணவனிடமிருந்து பிரிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் – காப்பகத்தில் இருந்து விடுதலை

கடந்த ஜூன் மாதம் டெல்லிக்கு வெளியே இருக்கும் ஒரு தேவாலயத்தை பஜ்ரங் தளம் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் இரண்டரை லட்சம் பேர் பார்த்துள்ளதை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

30 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழுவால் விசாரிக்கப்பட்ட அஜித் மோகன், சமீபத்தில் வெளியான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரை குறித்தும் ஃபேஸ்புக்கின் உயர் அதிகாரிகள் மத்தியில் இருக்கும் அரசியல் சார்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் சமயத்தில் பரபரப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

இதற்கு பதிலளித்த அஜித் மோகன் ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து வகையான வெறுப்பு பிரச்சாரங்களையும் கண்டிப்பதாகவும், ஃபேஸ்புக் நிறுவனம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சார்பானது இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய வணிக நலன்களுக்காக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அந்நிறுவனத்தின் முன்னால் நிர்வாகி அங்கி தாஸ் இஸ்லாமிய விரோத கருத்துக்களை முன்வைத்த பாஜக தலைவருக்காக பரப்புரை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்