Aran Sei

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

credits : indian express

”பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள், ஒரியண்டல் (கிறித்துவ) பள்ளியை சூறையாடினார்கள் என்பதே டிசம்பர் 26-ம் தேதிக்கான தலைப்புச் செய்தியாக இருக்கும்” என பஜ்ரங் தளம் நிர்வாகி பேசியுள்ளதாக பாராக் புல்லட்டின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது

விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் அணி பிரிவான பஜ்ரங் தளம்,  இந்துத்துவத்தையும் தீவிர வலதுசாரி கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது, இந்தியாவில் இந்து சமயத்தைக் காப்பற்றுவது, மதமாற்றங்களைத் தடுப்பது, இந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாக உள்ளன.

அசாம் மாநிலம், சில்சார் மாவட்டத்தில் பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சோஹன் சிங் சோலங்கி கலந்துகொண்டு பேசுகையில் ”இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், இந்துக்களின் சாராம்சத்தை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சண்டை செய்ய வேண்டும்“ என்று கூறியதாக பாராக் புல்லட்டின் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

இதையடுத்து பேசிய பஜ்ரங் தளத்தின் சில்சார் மாவட்டத் தலைவர் கமல்நாத் ”கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயத்திற்குச் செல்லும் இந்துக்கள் கொடூரமாக தாக்கப்படுவார்கள்” என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ”ஷில்லாங்கில் இருக்கும் கோயில்களைப் பூட்டி வைத்துள்ள அவர்களுடன் (கிறிஸ்துவர்களுடன்) பண்டிகையைக் கொண்டாடுவதா? இது நடக்க கூடாது அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

”ஊடகங்களும், பத்திரிகைகளும் பஜ்ரங் தளம் அமைப்பைக் குண்டர்கள் கூட்டம் என அழைக்கிறது. இந்துப் பெண்கள் மீது மற்றவர்கள் கை வைத்தால் நாங்கள் குண்டர்களாகத் தான் மாறுவோம், அதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

“பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த குண்டர்கள், ஒரியண்டல் (கிறித்துவ) பள்ளியைச் சூறையாடினார்கள் என்பதே டிசம்பர் 26-ம் தேதிக்கான தலைப்புச் செய்தியாக இருக்கும், எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்பட மாட்டோம்” என வன்முறையில் ஈடுபடப் போவதை கமல்நாத் முன்கூட்டியே அறிவித்துள்ளார்.

”பள்ளிகளில் நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் இந்துக்கள் கலந்துகொள்ள அனுமதிக்க மாட்டோம்” எனவும் கமல்நாத் கூறியுள்ளார் என்று பாராக் புல்லட்டின் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

முன்னதாக ஷில்லாங்கின் குயிண்டன் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் கலாச்சார மையம் காசி மாணவர் அமைப்பால் பூட்டப்பட்டுள்ளது. விவேகானந்தர் கலாச்சார மையம் ராமகிருஷ்ணா மிஷனின் ஒரு பகுதியாகும்.  விவேகானந்தர் கலாச்சார மையத்தின் செயலாளர் மகாராஜ் ”காசி மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள் எந்த கோயிலையும் பூட்டவில்லை, கலாச்சார மையத்தை தான் பூட்டினார்கள்” என கூறியதாக ஈஸ்ட் மோஜோ என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தை குறிப்பிட்டுதான், கோயில்களை கிறிஸ்துவர்கள் பூட்டியதாக பஜ்ரங் தளம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் கமல்நாத் பேசியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்