Aran Sei

ஒவைசியை அழைத்ததா திமுக?: பாஜகவை வீழ்த்த யாருடனும் கைகோர்க்க தயார் – ஐயூஎம்எல்

சாதுதின் ஓவைசியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாக திமுகவின் சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திமுகவின் சிறுபான்மை பிரிவின் சார்பாக ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில், சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சந்திப்பின் போது, அந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள, ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை மஸ்தான் மறுத்துள்ளார்.

“கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருந்தோம். ஆனால், அதற்குள் இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோவை யாரோ வெளியிட்டுள்ளனர். அதை செய்தது யார் என்று எங்களுக்கு தெரியாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தி இந்து – விடம் தெரிவித்துள்ளார்.

பீகாரில், காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு ஒவைசி தனித்து நின்று ஓட்டைப் பிரித்ததும் ஒரு காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், ஒவைசியை கூட்டத்திற்கு அழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்ததா என்று கேள்விக்கு, “அந்த பிரச்சனைக்குள் நாங்கள் செல்லவில்லை. கூட்டணி கட்சியினர் மட்டுமே இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்” என்று மஸ்தான் தி இந்து – விடம் பதில் அளித்துள்ளார்.

ஒவைசியை கூட்டத்திற்கு அழைப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.

“தமிழகத்தில் பாஜக கால் ஊன்றாமல் தடுத்து, தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்று அவர் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்