Aran Sei

‘வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்குவது பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ – அசாம் சாகித்ய சபா

டகிழக்கு மாநிலங்களில் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கையை விமர்சித்துள்ள அசாம் சாகித்ய சபாவானது, அம்மண்ணின் பூர்வீக மொழிகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, அசாம் சாகித்ய சபா பொதுச் செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி கட்டாயமாக்கப்பட்டால், பழங்குடி மொழிகளின் எதிர்காலத்திற்கும் தொடர்பு மொழியான அசாமி மொழியின் எதிர்காலத்திற்கும் ஆபத்து நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் அசாமி மொழியை சேர்க்க வேண்டும் என அசாம் சாகித்ய சபா மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமித் ஷா பேசியதன் எதிரொலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் #இந்தி_தெரியாது_போடா

எட்டு வடகிழக்கு மாநிலங்களும் 10ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க ஒப்புக்கொண்டது என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை அசாம் மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், இது பண்பாட்டு ஏகாதிபத்தியத்தை நோக்கிய நகர்வு என்றும் கூறியுள்ளன.

இந்தி அல்லாத பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்