Aran Sei

அசாம்: காவல் மரணமடைந்த நபரின் மனைவி உட்பட 5 பேர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

சாம் காவல்துறையினர் கடுமையான சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமான ஊபாவின் கீழ் போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் மனைவி உட்பட ஐந்து பேர் மீது நேற்று (மே 23) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள படத்ரபா காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீன் வியாபாரியான ஷஃபிகுல் இஸ்லாம் மரணமடைந்ததைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்தித்திற்கு தீ வைத்தனர். இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேர் உட்பட 6 பேர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசாம்: காவல் மரணத்தால் கோபமடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தீவைப்பு – தீ வைத்தவர்களின் வீடுகளை இடித்த மாவட்ட நிர்வாகம்

கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா பங்களா குழுவுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அசாமில் காவல் மரணமடைந்த ஷஃபிகுல் இஸ்லாம் என்பவர் குடிபோதையில் பிரச்சினை செய்ததால் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் உடல்நல பிரச்சினை காரணமாக அவர் மரணமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் ஷஃபிகுல் இஸ்லாமிடம் காவல்துறையினர் 10,000 ரூபாய் லஞ்சம் மற்றும் ஒரு வாத்து கேட்டுள்ளனர். அதனைத் தர முடியாது என்று ஷஃபிகுல் இஸ்லாம் கூறியதால் காவல்துறையினர் அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று மரணமடைந்தவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது.

அசாம் காவல் மரணம் – காவல் நிலையத்துக்கு தீ வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் எனக் குற்றஞ்சாட்டிய பாஜக

இதன் பின்னர் மரணமடைந்தவரின் குடும்பம் மற்றும் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளின் மக்கள் ஒன்று சேர்ந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையால் போராட்டக்காரர்கள் காவல்நிலையத்திற்கு தீவைத்துள்ளனர்.

இந்நிலையில் மே 22 அன்று காவல்நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் வீடுகளை நாகோன் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

Source : the wire

Annamalai-க்கு கருத்து சுதந்திரம் பத்தி பேச தகுதி கிடையாது Pasumpon Pandian

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்