Aran Sei

மாந்திரீக நம்பிக்கையால் பலியான இரண்டு உயிர்கள் – அஸ்ஸாமில் கோர நிகழ்வு

credits:maalaimalar.com

அசாம் மாநில கர்பி அங்லாங் மாவட்டத்தில் இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை மற்றும் பில்லி சூனியம் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதெனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தி இந்து நாளேடு-க்கு அளித்துள்ள பேட்டியில் ”செப்டம்பர் 27-ம் தேதி இறந்துபோன சிறுமியின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று கிராமத்தலைவர் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐம்பது வயதுப் பெண்ணும் அவருக்குத் தொடர்பு இல்லாத 28 வயது இளைஞரும் கொல்லப்பட்டு ஒன்றாக எரிக்கப்பட்டுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட இரண்டு பேரும் மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தாலேயே அந்தச் சிறுமி இறக்க நேர்ந்தது என அவர்கள்மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள் ஒன்பது நபர்களும் கொலையை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற ஆறு நபர்கள் தலைமறைவாகி உள்ளார்கள் எனவும் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

கொலையாளிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தில், இரண்டு பேரையும் அடித்தே கொன்றதாகக் கூறியுள்ளார்கள் எனக் காவலர் ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பில்லி சூனிய வேட்டையில் ஈடுபடுவதும், அதனால் கொல்லப்படுவதும் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது.

அசாம் மாநில சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட தரவுகளின்படி, 2011 முதல் 2019 நவம்பர் மாதம்வரையில் 107 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூனியக்காரர்கள் என்று பழி சுமத்தப்பட்டு ஐந்து பேரைக் கொன்ற வழக்குக்குப் பிறகு, அசாம் மக்கள் பில்லி சூனிய வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் பிரஹாரி என்ற விழிப்புணர்வு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்